ஒரு படத்திற்கான தலைப்பை தீர்மானிப்பதில் இருந்து அந்த படத்தின் கலைத் தன்மை தொடங்குகிறது. தமிழில் திரைப்படத் தலைப்பு என்பது பார்வையாளர்களை உள்ளிலுழுக்கும் போதை வஸ்து போலவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. கதை, கதாபாத்திரங்கள் எவ்வித உள்ளீடுகள் பற்றியும் கவலையற்ற அத்தகைய தலைப்புகள் பெரும் ஆயாசத்தை உண்டு பண்ணுபவை. ஆனால் இயக்குனர் வஸந்த தலைப்பில் இருந்து தன்னுடைய ரசனையை தொடங்குகிறார். படத்தின் வெற்றி தோல்வி என்பதை யெல்லாம் தாண்டி, தான் எதிலும் சமரசம் செய்துக்கொள்ளாமல் தனக்கு தேவையான இறுதி பிரதியை வரையறை செய்துக்கொள்கிறார்.
மென்னுணர்வுகளை கையாள்வதில் தேர்ந்த பெரும்கலைஞன் சத்யஜித் ரே, அதே வகையில் தமிழில் மென்னுணர்வுகளை அழகியலோடு சேர்த்து கலையாக மாற்றியவர் வஸந்த். ரிதம் அதற்கு மிக முக்கியம் சான்று. ஒரு திரைப்படம் உருவானதில் என்ன பெரும் கதை இருந்துவிடப் போகிறது என்று நீங்கள் நினைத்தால், அவசியம் இந்த புத்தகத்தை பரட்டிப் பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் படைப்பாளியை இயக்குனர் வஸந்த்தின் வார்த்தைகள் அடையாளம் காட்டலாம்.
วันเปิดตัว
อีบุ๊ก: 3 มกราคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา