ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
காட்சிக்கு எளிமையும், கருணையும் வடிவாகவும் வாழ்ந்து நிலைத்தவர் காஞ்சி மகா பெரியவர்.
தேசம் முழுவதும் நடந்தும் ஒயாதவை அவர் தம் தெய்வீக பாதங்கள்! காஞ்சி மகான், காஞ்சிப் பெரியவர், ஜகத்குரு என்று போற்றி வணங்கப்பட்ட அப்புனிதரின் பாதுகையை ஆராதிப்பது, அவரையே ஆராதிப்பாதாக கருதப்படுகிறது!
காஞ்சி மடத்தின், 68வது பீடாதிபதியாகத் திகழ்ந்த புகழ்மிகு சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் பாதுகை அருள் பெற்ற அறுபத்தியெட்டு பக்தர்களின் பரவச அனுபவங்களை, கட்டுரைகள் மற்றும் சொல்லுரைகள் வாயிலாகப் பெற்று, அடர்த்தியான ஆன்மிகப் பெட்டகமாக இந்நூலை தொகுத்திருக்கிறார் டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன்.
பல காலம் காத்திருந்து காஞ்சி மகா பெரியவரிடமிருந்தே வாய்ப்பு பெற்றவர்களும், தாமே பாதுகை வாங்கி காஞ்சி மகானின் பாதங்களில் அணிவித்து அனுக்கிரகம் செய்யப்பெற்று வழிபடும் அணுக்கத் தொண்டர்ள் பரவிப் படர்ந்துள்ளனர்.
அவ்வாறு மகா பெரியவரின் பாதுகையை பூஜிப்பவர்களை ஒன்று திரட்டும் நோக்கோடு உருவாக்கப்பட்ட தொகுப்பு நூல் இது.
பாதுகையில் இறங்கும் மகானின் தவ வலிமையும், இறைமையும் பாதுகையிலும் தங்குவதாகக் கூறப்படுகிறது. அதீத நம்பிக்கையே ஆத்மார்த்த இறைவழிபாட்டின் அசைக்க முடியாத அடித்தளம்.
பாதத்தைத் தொழுவதால் தான் நல்லருள் கிட்டும் எனும் நித்திய நம்பிக்கையின் நீட்சியே பாதுகையைத் தொழுதலாகும்.
காஞ்சி மகானின் பாதுகைகள் அருளப்பெற்ற பக்தர்களின் பக்திப் பிரவாகம், நூலெங்கும் தூய வெண்பனிநீர் வெள்ளமாகப் பாய்ந்தோடிகிறது.
பெரியவரிடமிருந்தே புஷ்பப் பாதுகை வழங்கப்பட்டு அனுக்கிரகம் பெற்ற பிலாஸ்பூர் சுவாமிகள், பெரியவர் தன் வீட்டில் விட்டுச் சென்ற பாதுகையைப் பிருப்பிக் கொடுக்க, சென்னையிலுருந்து காஞ்சி வரை வெறுங்காலோடு நடந்து சென்றவரின் பயபக்தி.
சந்தன மரப் பாதுகைக்கு தங்கக கவசம் செய்து வழிப்பட்டவரின் இன்பக் களிப்பு, காஞ்சி மகானை மகானை இறைவனின் திருவுருவமாகவே பார்த்தவர்கள் எனப் பல ஆண், பெண் பக்தர்களின் உரை வெளிப்படுகள் நூலின் பெருமையை உயர்த்துகின்றன. சில நிகழ்வுகளும் நெஞ்சை நெகிழ்த்துகின்றன.
பாதுகையை பூஜிக்கும் விதம், வழிப்பாட்டுப் பொருள்கள் போன்ற விபரங்களையும், வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய தூய்மை, பாதுகை பராமரிப்பு போன்றவற்றையும் கட்டுரைகள் வாயிலாக அறிய முடிகிறது.
காஞ்சி மகானின் பெருமைகளை படம் பிடிக்கும் சிறந்த நூல்.
- மெய்ஞானி பிரபாகரபாபு
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย