Step into an infinite world of stories
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் மட்டும்தான்... அந்த முடிவோடுதான் இரண்டு வரிக் கதைக் கருவை அமைத்தேன்... என் மனதில் அதை எடுத்தேன்... எழுத ஆரம்பித்திருக்கிறேன்... எட்டு பாக நாவலாக அது விரிந்து ஓடும்...
இந்தக் கதையில் காதல் மட்டும்தான்... காதலைத் தவிர வேறு இல்லை... ஆங்காங்கே ஒருங்கிணையும் சம்பவங்களும் பாத்திரங்களும் கதையின் போக்கில் செண்டிமெண்ட்களை அள்ளித் தெளித்தாலும் ரொமான்ஸ் மட்டுமே முதன்மையாக நிற்கும்.
இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதலாக எனது பாக நாவல்களில் முகப்புக் கவிதை வரிகளில்லாமல் வருகின்ற நாவல் இந்த 'எண்ணியிருந்தது ஈடேற...' நாவல்...
ஏன் இப்படி என்று கேட்டால் அது அப்படித்தான் என்பதே என் பதிலாக இருக்கும்... ஒன்பது பாக நாவலை உணர்ச்சி மயமான குடும்ப செண்டிமெண்டுடன் சொல்ல இருக்கிறேன்... பத்து பாக நாவலைப் பற்றியும் அதற்கடுத்து கொடுக்கப் போகும் இருபது பாக நாவலைப் பற்றியும் அந்தத் தருணத்தில்தான் யோசிக்க வேண்டும்...
ஆதலினால்... காதல் சொல்லும் எட்டு பாக கதையை என் வாசக, வாசகியர்க்கு கொடுத்து விட எண்ணம் கொண்டதில் பிறந்ததுதான் இந்த முழுநீளக் காதல் கதை...!
எண்ணியிருப்பதை ஈடேற்றும் கதைக்களமாக நம் இந்தியத் திருநாட்டின் கேரள மண்ணைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்... பச்சைப் பசோலென்ற தேயிலைப் பாத்திக்களின் நடுவே இயற்கையுடன் கலந்து வாழும் கேரளத்து மக்களிடையே ஒளிந்து கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறாள் நம் கதையின் நாயகி நந்தினி...!
சேர நாட்டின் ரவிவர்மனின் குலத் தோன்றல்களில் ஒரு தோன்றலில் வம்சா வழியில் வந்தவனாய்.... ரவிவர்மனின் அனைத்து குணாதிசியங்களையும் தன்னிடத்தில் கொண்டவனாய்... கண்டிப்பும் கறாருமான ரவிச்சந்திரன் நம் கதையின் நாயகனாய் நந்தினிக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்...
இவர்கள் இருவரும் பயணிக்கும் மங்களூர் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து கிளம்பி கேரளாவின் 'கோழிக் கோடு' நகரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது... இந்தப் பாகம் முழுவதும் மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் அவர்கள் பயணிக்கும் கதை மட்டுமே இருக்கும்... கோழிக்கோடில் இறங்கிய பின்பு அடுத்து அவர்கள் செல்லப் போகும் இடங்களையும், நடக்கப்போகும் சம்பவங்களையும் மற்ற பாகங்கள் விவரிக்கும்...
அடடே...! டிரெயினுக்கு டைம் ஆச்சு... வாங்கப்பா... நந்தினி, ரவிச்சந்தினோட நாமும் டிரெயினில் தொற்றிக்கலாம்... தடக்... தடக்... தடக்...
Release date
Ebook: August 3, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International