Masuki dunia cerita tanpa batas
Fiksi
அதே நேரம் உள்ளே வந்தாள் கோபிகா. மார்பில் அணைத்திருந்த புத்தகங்கள் அவளையே சாய்த்துவிடும் போலிருந்தது. உள்ளே வந்த கோபிகா புத்தகங்களை அருகிலிருந்த மேசை மீது வைத்துவிட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். கொஞ்சினாள். கோபிகா கல்லூரியில் முதல் வருடம் படிப்பவள். “அம்மா... ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்றாள். அம்மா விசயத்தை சொன்னாள். “அத்தானை அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன? நாம நம்ம அக்கா புள்ளையை அனுசரிக்கலைன்னா வேற யார் அனுசரிப்பா? பொண்டாட்டி செத்த துக்கத்துல ஒரு ரெண்டு வருஷம் இருக்கலாம். அப்புறம் அவரு வேற எங்கயாவது ஒரு பொண்ணைப் பார்த்து கட்டிப்பாரு. அப்ப வர்றவ இந்தப் புள்ளையைக் கொடுமைப்படுத்துவா. கொடுமையையெல்லாம் எப்படித்தான் தாங்கிப்பேனோ?” “அம்மா...” தயக்கமாய் அழைத்தாள் கோபிகா. “என்னம்மா?” “நான் அத்தானைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.” கோபிகா சொன்ன பதிலைக் கேட்டு இருவரும் அதிர்ந்தனர். கோபிகா சொன்னதைக் கேட்டு சரசு, சூடாமணி மட்டுமல்ல மன எரிச்சலுடன் உள்ளேயிருந்த கவிதாவும் அதிர்ந்தாள்... மெல்ல வெளியே வந்தாள்“கோபிகா... நீ என்னம்மா சொல்றே?” என்றார் சூடாமணி. சரசு மகளை திகைப்பு மாறாமல் பார்த்தாள். “ஆமாம்ப்பா. மணிகண்டன் குழந்தை. நம்ம அக்காவோட குழந்தை. சின்னம்மாக்காரிக்கிட்ட கொடுமைப்படுத்தப்பட்டா அதை பார்த்துக்கிட்டு எப்படிப்பா இருக்க முடியும்? அத்தான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்காம இவனுக்காகவே தன்னை அர்ப்பணிப்பாரா? மாட்டார். யாரையாவது கல்யாணம் பண்ணிப்பார். வர்றவள் நல்லவளாயிருப்பாள்னு எப்படி நம்பறது? அதனால அக்காவோட புள்ளைக்காக நான் அத்தானைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். இவனைத் தாயா இருந்து நான் வளர்க்கிறேன்.” அப்பாவும் அம்மாவும் மெய்சிலிர்த்தனர். “கோபிகா... உன்னோட நல்ல மனசு எனக்குப் புரியுதும்மா ஆனா...” “ஆனா என்னப்பா?” “கவிதாவுக்கும் மாப்பிள்ளைக்கும் வயசு வித்தியாசம் அவ்வளவா கிடையாது. பொருத்தம் இருக்கும். ஆனா நீ சின்னப் பொண்ணு. உனக்கும் மாப்பிள்ளைக்கும் பத்து வயசு வித்தியாசம் இருக்கும். தவிர... நீ காலேஜ் படிச்சுக்கிட்டிருக்கறே. உன்னைப் படிக்க வைச்சு பெரிய வேலைக்கு அனுப்பணும்னு ஆசைப்பட்டேன். நீ எப்படி... கிராமத்துல போய் வாழ்வே? இந்த வீட்லேயே முதன்முதலா காலேஜுக்குப் போன பொண்ணு நீதான். படிப்போட மட்டும் இல்லாமல், பாட்டு, பேச்சு, கம்ப்யூட்டர்ன்னு எதையெதையோ கத்துக்கிட்டிருக்கே. கிராமத்துல வாழ்க்கைப்பட்டு உன் திறமையையெல்லாம் அழிச்சுக்கப் போறியா?” அப்பா அப்படி சொன்னதும் சிரித்தாள் கோபிகா. “அப்பா... மணிகண்டனுக்காக நான் என் படிப்பு, லட்சியம் எல்லாத்தையும் விட்டுட தயாராயிருக்கேன். அக்காவோட குழந்தையை என் குழந்தையா வளர்ப்பேன். அக்காகூட ரெண்டு பேரு கூடப் பிறந்திருந்தும் அவளோட புள்ளையை அனாதையா விடலாமா? அதனாலதான்...சூடாமணி அவளை நிமிர்ந்து பார்த்தார். கோபிகா அழகான இளம் மான்குட்டியைப் போலிருந்தாள். நல்ல நிறம். கரிய பெரிய விழிகள். நிறைய லட்சியங்களைப் பிரதிபலிக்கும் விழிகள். நன்றாகப் படிக்கக்கூடியவள். இரண்டு பெண்களும் படிக்காததால் அவளையாவது நிறைய படிக்க வைத்து பெரிய வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று சூடாமணி கனவு கண்டார். ராகவேந்திரனுடன் கோபிகாவை இணைத்துப் பார்த்தபோது இதயம் வலித்தது. மூன்று பெண்களிலேயே மிகவும் அழகானவள் கோபிகாதான். தனக்கு எந்தவிதத்திலும் பொருத்தமில்லாத ஒருவனை கல்யாணம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறாள். காரணம் குழந்தை. அக்காவின் குழந்தை அனாதையாகிவிடக்கூடாது என்ற ஆதங்கம். அந்த ஆதங்கம் தன்னையே அர்ப்பணிக்கத் தயாராகிவிட்டது. “கோபிகா... நல்லா யோசிச்சுத்தான் சொல்றியா?” அப்பா தயக்கமாகக் கேட்டார். “இதுல யோசிக்க என்னப்பா இருக்கு? கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க...” “அதுக்கில்லைம்மா... அக்கா புள்ளை மேல உள்ள பாசத்தால நீ இந்த - முடிவை எடுத்துட்டுப் பின்னாடி வருத்தப்படக்கூடாது.” “இல்லப்பா... நான் தெளிவா இருக்கேன். என் படிப்பைப் பத்தி நான் கவலைப்படலை” என்றாள். சூடாமணிக்கு இதில் விருப்பம் இல்லை. சரசுவிற்கும்தான். கவிதா சுமாராக இருப்பாள். எட்டாம் வகுப்போடு நின்றுவிட்டாள். பார்வதிக்கும் அவளுக்கும் ஓரிரு வயசுதான் வித்தியாசம். அதனால் ராகவேந்திரனுக்கு அவள் பொருத்தமானவள் என நினைத்தார். கோபிகாவை கொடுக்க மனம் வரவில்லை. அழகு, படிப்பு இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் வயது வித்தியாசம் இருக்கிறதே என்று கலங்கினார்.
© 2024 Pocket Books (Ebook): 6610000532971
Tanggal rilis
Ebook: 14 Februari 2024
Lebih dari 900.000 judul
Mode Anak (lingkungan aman untuk anak)
Unduh buku untuk akses offline
Batalkan kapan saja
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bahasa Indonesia
Indonesia