Step into an infinite world of stories
Fiction
இன்றைய மனித மனம் தனக்கான தேவை எது என்பதனைக் கூட அறியாமல், வாழ்க்கைப் பயணத்தில் எதையோ தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. நிம்மதி இல்லாமல் நாளும் நாளும் வெந்து தணலாகின்றது. அறியாமல் நடக்கும் பிழைகளை விட இங்கு அறிந்து நடக்கும் பிழைகளே மிகுதி. நெருப்பு சுடும் என்று தொிந்தே இங்கு நெருப்பில் விரல் வைக்கின்றாா்கள். அதனைக் குறியீடாகக் கொண்டு அமைந்ததே இந்த தீக்குள் விரலை வைத்தால். இக்கவிதைத் தொகுப்பு முழுமையும் பெண்ணியச் சிந்தனைகளும், சமுதாயப்பாா்வைகளும், தனிமனித எண்ண ஓட்டங்களும் நிறைந்திருக்கக் காணலாம்.பெண் சுதந்திரம் அடைந்து விட்டாள் என்று ஒரு புறமும், பெண் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறாள் என்று ஒருபுறமும் கூக்குரல்கள் எழுந்தாலும் பெண் இன்னும் பெண் என்பதாலேயே தாண்ட முடியாத லட்சுமணக் கோடுகள் இன்னும் இருக்கின்றன என்பதனை பல கவிதைகள் விளக்குகின்றன.
சமூகத்தினை காலக்கண்ணாடியோடு பாா்க்கும் போது இன்னும் அழுக்கான பக்கங்கள் திருப்பப் படுவதனை சில கவிதைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. மொத்தத்தில் இத்தீக்குள் விரலை வைத்தால் சுடும். ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து ஆதித் தாயாய், ஆக்க சக்தியாகவே வாழ்ந்துவரும் பெண்மையின் வாழ்க்கை ஒரு போன்சாயைப் போன்று வித்தியாசமானது, சிலந்தி வலைக்குள் சிக்குப்பட்ட ஒரு பூச்சியாகவும் மனிதத்தின் பகடைக் காயாகவும் விளங்குகின்றது.
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India