Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
கல்யாணம் என்றாலே புதுமை தான், ஆனந்தம் தான், கோலாகலம் தான். மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்துள்ள வீட்டையே "கல்யாண வாசல்" என்று தான் சொல்லுவோம்.
அப்படியிருக்க, அகிலத்தின் சாந்திக்காகவும் சுபிட்சத்திற்காகவும் நடைபெறுகிற தெய்வத் திருமணங்கள் என்றால் எத்தனை ஆனந்தம், எத்தனை கோலாகலம்! அறமும் அருளும் அணைவது போலே, பக்தியும் ஞானமும் இணைவது போலே, ஜீவனும் பிரம்மமும் சேர்வது போலே ஆத்மானந்தம் அருள்வதாய் இருக்கும் இந்தத் தெய்வீகத் திருமணங்களில் ஒன்றே ஆண்டாள்-அரங்கன் திருமண வைபவம்.
இத்திருமணத்தைப் பற்றி அனுபூதிமான்கள் பலர் எடுத்துப் பேசியிருக்கிறார்கள். இருந்தாலும் இதன் மகிமைகளை மணப்பெண்ணே எடுத்துரைத்தல் சிறப்பல்லவா?
தன் திருமணம் எவ்வாறு நடைபெறும் என்பதனை ஆண்டாளே சொப்பனத்தில் கண்டு அமிழ்தொழுகும் தமிழ்ப்பாசுரங்களாக அதனை வெளிப்படுத்தியிருக்கிறாள். அந்தப் பாக்களே "வாரணாமாயிரம்" என்று பெயரும் பெருமையும் கொள்கிறது.
Release date
Ebook: 5 February 2020
English
India