ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
แฟนตาซี&ไซไฟ
சரியாக ஆறுமணிக்கு கதிரின் பைக் வந்து பங்களா வாசலில் நின்றது! சொப்னாவும் அதிலிருந்து இறங்குவதை அப்பா தன் அறையிலிருந்தே பார்த்தார். எல்லா பக்கமும் வீட்டுக்குள் அவர் காமிரா பொருத்தியிருப்பதால் எந்த ஒரு நடவடிக்கையும் அவர் கண்களிலிருந்து தப்பிக்க முடியாது! இருவரும் உள்ளே நடந்து வந்தார்கள். அவனது நடை, தோற்றம், கம்பீரம் - சகலத்தையும் தனசேகர் கணக்கெடுத்து விட்டார். அவர்கள் ஹாலில் உட்கார்ந்த சில நொடிகளில் அம்மா மஞ்சுளா வந்து சொல்ல, மெதுவாக எழுந்து வந்தார்! கதிர் எழுந்து நின்று வணங்கினான்! பதிலுக்கு வணக்கம் சொல்லாமல், தலையை மட்டும் அசைத்தார். எதிரே உட்கார்ந்தார். “சொப்னா எல்லாம் சொன்னா! உன்னைப் பற்றி நானும் விசாரிச்சேன். உள்ளே வா! உன்கிட்ட மட்டும் நான் கொஞ்சம் பேசணும்!” எழுந்து நடக்க, கதிர் பின்தொடர்ந்தான். அவரது அறைக்குள் இருவரும் நுழைந்தார்கள். “ஒக்காரு!” “இருக்கட்டும்!” “சொப்னா கோடீஸ்வரன் மகள்! அவ உன் வீட்ல வந்து வாழ முடியாது!“அப்படியா?” ஒரு பெட்டியை எடுத்து மேஜை மேல் வைத்தார். “இதுல அஞ்சு லட்ச ரூபாய் இருக்கு. உங்க கேன்டீனை பெரிய ஹோட்டலா மாத்துங்க! பிழைச்சுப் போங்க! என் மகளை நீ விட்டுத்தர உனக்கு நான் தர்ற விலை!” கதிர் சிரித்தான். “ஏன் சிரிக்கற?” “என்னை நீங்க புரிஞ்சுக்கலை! சொப்னா உங்க மகள். இப்ப அவ உங்க சொத்து! அதை நான் விட்டுத் தர்றதுக்கு விலையா? அபத்தமா இருக்கு. நான் என்கிட்ட வச்சுக்கிட்டாத்தான் விட்டுத்தர விலை தரணும். பணமெல்லாம் வேண்டாம். ‘இந்தப் பையன் உனக்கு வேண்டாம்’னு சொல்லி சொப்னாவை தடுத்து நிறுத்திடுங்க! இதுக்குப் போய் ஏன் அஞ்சு லட்சம் செலவு?” அவர் மிரண்டு போனார். “அவ கேக்க மாட்டாளே! சொப்னா பிடிவாதக்காரி. கதிர்தான் வேணும்னு சொல்லுவா!” “அதுக்கு நான் என்ன சார் செய்ய முடியும்?” “நீ அவளை விட்டு விலகணும். அவ மனசுல கசப்பை உண்டாக்கணும்!” “எதுக்கு?” “எனக்கு நீ மாப்பிள்ளையாக முடியாது!” “அதுக்காகப் பொய்சொல்றதோ, சொப்னா கிட்ட நாடகமாடறதோ எனக்குப் பிடிக்காத விஷயம்!” அவர் அவனயே கூர்ந்து பார்த்தார். “நீ பொய் சொல்லமாட்டே! பணத்துக்கும் விலை போக மாட்டே இல்லையா?” “ஆமாம்அருகில் வந்து தோளில் கை போட்டார். “வெரிகுட்! நீதான் எனக்கு மாப்பிள்ளை!” “சார்!” “என் மகளை சந்தோஷமா உனக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கறேன்! ஆனா நீ என் வீட்டோட வந்துடணும். பொறுப்புகளை ஏத்துக்கணும். உன் அப்பா, அக்கா வாழ எல்லா வசதிகளையும் நான் செஞ்சு தர்றேன்!” கதிர் எழுந்து விட்டான். “ஸாரிங்க! அதுக்கு வாய்ப்பே இல்லை.” “என்ன பேசற? என் மகள் உன் வீட்ல வந்து வாழணுமா?” “அதுதான் முறை!” “இது நடக்குமா?” “சொப்னாவை நான் கட்டாயப்படுத்தலை. அவ விரும்பினா இதுக்கு சம்மதிக்கட்டும். கோடீஸ்வரர் தனசேகரோட மாப்பிள்ளையா நான் ஆயிட்டாலும், அன்பும் ஆதரவும் மட்டும்தான் எனக்கு வேணும். வேற எதையும் நான் எதிர்பாக்கலை. உங்க மகளையும் கேட்டு கலந்து முடிவெடுங்க! தேவைப்பட்டா மேற்கொண்டு பேசலாம்!” வணங்கினான். கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்
© 2024 Pocket Books (อีบุ๊ก ): 6610000508433
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 13 มกราคม 2567
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย