ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4.5
‘காலச்சக்கரம், ரங்கராட்டினம், சங்கதாரா’ மூன்றுமே பெரும் தாக்கத்தை எங்களுள் ஏற்படுத்திவிட்டன! தயவுசெய்து, வருடத்திற்கு ஒரு நாவலை எழுதாமல், நிறைய எழுதுங்களேன்,’ என்று நாவல்களை படித்துவிட்டு, என் ரசிகர்கள் என்று கூறிக் கொள்ளும் பலரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்களை என் ரசிகர்கள் என்று நான் கூறிக்கொள்ள விரும்பவில்லை. என் ரசிகர்கள் என்று கூறினால், நான் ஏதோ பெரிய சாதனையை செய்துவிட்டது போல ஆகிவிடும்.
“தமிழில் பேசுவதும், எழுதுவதுமே ஒரு பெரிய சாதனையாகிவிட்டது, இந்த காலத்தில்! ஆங்கில பத்திரிகையில் பணிபுரிந்துக் கொண்டு தமிழில் எப்படி எழுதுகிறீர்கள்?” என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
சங்கதாரா! இந்த நாவலைப் படித்து விட்டு எனக்கு வரும் தொலைபேசி மற்றும் கைபேசி கால்கள், ஈமெயில்கள் ஆகியவற்றிக்கு தினந்தோறும் பதிலளித்தபடி தான் இருக்கிறேன்.
“என்ன இப்படி செய்துவிட்டீர்கள்! நான் எவ்வளவு பெரிய இடத்தில் அவரை வைத்திருக்கிறேன் தெரியுமா.” என்று பலர் விசனப்பட்டார்கள்.
ஒரு லைப்ரரியன் என்னுடன் சண்டையே போட்டார்! எதற்கு இப்படி எழுதினீர்கள் என்று.
நான் எல்லோருக்கும் சொல்லிக் கொள்வது இதுதான்! ஆங்கிலத்தில் ‘Familiarity Breeds Contempt’ என்பார்கள். அதன்படி நாம் உயர்வாக நினைத்திருக்கும் பலரது உண்மை சொரூபம் தெரிய வரும்போது, ஜீரணிப்பது கஷ்டம்தான். அதற்காக உண்மைகளை ஆராயாமல் இருக்க முடியுமா?
என்னால் மறக்க முடியாத சம்பவம், சரித்திர மாமேதை சாண்டில்யனின் மகனும், வைணவா கல்லூரியின் பேராசிரியருமான திரு. சடகோபன் அவர்களிடமிருந்து வந்த தொலைபேசிகால் தான். எனது சங்கதாராவை போற்றி தள்ளினார். ‘பல கேள்விகளுக்கு நீங்கள் சரியான விடைதந்திருக்கிறீர்கள்’ என்று சரித்திரம் அறிந்த அவர் பாராட்டியபோது நெகிழ்ந்து போனேன்.
தன் தந்தையின் வழியில் நீங்கள் ஒரு சிறந்த சரித்திர நாவலை படைத்திருக்கிறீர்கள் என்று அவர் சொன்னதோடு நில்லாமல், என் பெற்றோர்களிடமும் தொலைபேசி மூலம் என் நாவலை பாராட்டினார். நான் பெற்ற பெரும் பேறு!
சங்கதாராவை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் தினமும் விவாதித்து வருகிறார்கள், என்பதே எனக்கு பெரிய பெருமை! ஆயிரம் நாவல்களை எழுதி, லைப்ரரி அலமாரிகளை நிரப்புவதை விட, நான்கு நாவல்கள் எழுதி அவை எப்போதும் புழக்கத்தில் இருப்பதையே விரும்புகிறேன். என் நாவலை பெரிதும் விரும்பி கேட்கிறார்கள் என்று பல லைப்ரரியன்கள் குறிப்பாக, அரசு லைப்ரரிகளில் கூறுகிறார்கள்.
இந்த நாவலைப் படித்த என் நலவிரும்பி ஒருவர், என்னிடம் சொன்னை வார்த்தை இது:
‘பெண்களுக்கு கோபம் வரபோகிறது’ என்றார். மற்றவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை! ஆனால் இதைப் படித்தவர்கள் நிச்சயம். இதை மீண்டும் மீண்டும் படிப்பார்கள் என்று நம்புகிறேன்.
எனது நாலாவது நாவலான குபேரவன காவலை எழுதுவதற்குள் பல வேலைகள், தடங்கல்கள். இதையெல்லாம் கடந்து இந்நாவலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
என் குடும்பத்தாருக்கு குறிப்பாக என் மனைவிக்கும் நன்றி. மற்றும் என்னை ஆதரிக்கும் வாசகர்களாகிய உங்களுக்கு மிக நன்றி!
காலச்சக்கரம் நரசிம்மா
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 พฤษภาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย