ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
เรื่องสั้น
நாலாசிரியர் டாக்டர் ஜெ.பாஸ்கரன் தோல் மற்றும் நரம்பியல் மருத்துவராகக் கடந்த 37 வருடங்களாகச் சென்னையில் பணி புரிந்து வருகிறார். சென்னை மேற்கு மாம்பலம் ஹெல்த் சென்டரில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
தாய்மொழியாம், தமிழ்மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் ஒரு கணிசமான நேரத்தை ஒதுக்கி, சில புத்தகங்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் கடந்த பத்தாண்டுகளாக எழுதி வருகிறார்.
2010 ஆம் வருடத்துக்கான தமிழ்நாடு அரசின் 'சிறந்த மருத்துவ நூல் மற்றும் ஆசிரியர்' வகையில் "வலிப்பு நோய்கள்" புத்தகம் விருது பெற்றது. உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம் 'தலைவலி' புத்தகத்துக்கு (சிறந்த கட்டுரைத்தொகுப்பு) என்.ஆர்.கே விருதும், 'அப்பா என்னும் உன்னதமான உதாரண மனிதர்' கட்டுரைக்கு சிறந்த கட்டுரைக்கான விருதையும் வழங்கிக் கௌரவித்தது.
அமெரிக்காவின் உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம், 'அப்பாவின் டைப்ரைட்டர்' புத்தகத்திற்கு “Best Appreciation Award” வழங்கிக் கௌரவித்தது.
இவரது சிறுகதைகள் கலைமகள், தினமணிக் கதிர், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம் சிந்தனை இதழ்களில் வெளியாகின.
கலைமகளின் கி.வா.ஜ நினைவுச் சிறுகதைப் போட்டியில் (2018) இவரது 'காப்பு' சிறுகதை முதற்பரிசு பெற்றது. லேடீஸ் ஸ்பெஷல் சிறுகதைப் போட்டியில் (2018) 'நப்பின்னையாகிய நான்' ஆறுதல் பரிசு பெற்றது. இவரது "தேடல்", உரத்த சிந்தனை யின் என்.ஆர்.கே விருது 2018 சிறந்த சிறுகதைத் தொகுப்பு இரண்டாவது பரிசு பெற்றது.
நூற்றுக்கும் மேலான பொதுக் கட்டுரைகள், மருத்துவக் கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள், கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி, நம் உரத்த சிந்தனை, லேடீஸ் ஸ்பெஷல், இலக்கிய பீடம், மக்கள் முழக்கம், தினமணி.காம், விருட்சம்.இன், குவிகம்.காம் மற்றும் முகநூல் தளங்களில் வெளியாகி உள்ளன.
தமிழ் இந்துவில் தலைவலி, வலிப்பு நோய்கள் குறித்த தொடர்கள் 10 வாரங்களுக்கு வெளியிடப்பட்டன. மக்கள் குரல் திருநெல்வேலி பதிப்பு பத்திரிக்கையில், 'ஆட்டிசம்' மற்றும் நரம்பியல் கேள்வி பதில்கள் வெளியாயின.
டெக்கான் க்ரானிக்கல் 'துரித உணவுகள்' பற்றிய கட்டுரையை வெளியிட்டது. இசை, மூளை, மனம் பற்றிய ஆங்கிலக் கட்டுரைகளை 'நாத பிரம்மம்' என்ற இசை இதழ் வெளியிட்டது. 'அது ஒரு கனாக்காலம்' இவரது இளமைக்கால நினைவுகளின் கட்டுரைத் தொகுப்பு!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย