ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
சென்னையைச் சேர்ந்த திருமதி. லட்சுமி சுதா ஒரு பொறியியல் பட்டதாரி. தற்பொழுது 'மல்டி நேஷனல்' நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும் இவருக்கு சிறு வயது முதற் கொண்டே கதை, கவிதை மேல் ஆர்வம் அதிகம். ஆங்கில நாளிதழ்களுக்கு தற்கால நிகழ்வுகளைக் குறித்து நிறைய கட்டுரைகள் எழுதியுள்ள இவர் 2009 ஆம் ஆண்டு முதல் தரமான தமிழ் நாவல்களைப் படைத்துக் கொண்டு இருக்கிறார் அன்பை மென்மையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள், புதுமையான சூழல், விறுவிறுப்பான நடை, இனிமையான முடிவு இவை எல்லாம் இவரின் முத்திரை.
அம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி உள்ள இவர் ஒவ்வொரு நாவலிலும் ஒவ்வொரு அத்தியாயம் முன் ஒரு கவிதையை நமக்காக படைக்கிறார். இவருடைய நாவல்களில் உள்ள பெண்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. தற்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாவலை படைப்பது இவரின் இயல்பு. இவருடைய கதாபாத்திரங்கள் கதை கவிதை இயற்கை மனித நேயம், முதலியவற்றை விரும்புபவர்களாக இருப்பார்கள். டயலாக் சென்ஸ் (Dialog sense) பீல் குட் பாக்டர் (Feel good factor) இவரின் நாவல்களில் எப்பொழுதும் இருக்கும்.
பயணம் செய்வதில் விருப்பம் உள்ள இவர் புத்தகங்களின் மூலம் நம்மை இந்தியாவில் உள்ள எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்கிறார்.
நாவலின் விமர்சினங்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
lakshmisudha2010@gmail.com
lakshmisudha2010@yahoo.com
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 9 กรกฎาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย