Step into an infinite world of stories
ஜோஸ்மினா யூனிவர்ஸிட்டி ஹாஸ்டல். இரவு மணி பத்தரை. அறை எண் 356ல் நான்கைந்து பெண்களின் சிரிப்புச் சத்தமும் தமிழ் பேச்சும் கேட்டுக்கொண்டிருந்தது. “சூர்யா...! இன்னொரு சர்தார்ஜி ஜோக் ப்ளீஸ்...” “என்கிட்ட ஸ்டாக் அவ்வளவுதான். வனிதாகிட்ட கேளு. அவ சொல்லுவா...” வனிதா சிரித்தாள். “என்கிட்டேயும் ஸ்டாக் ஒவர். இளம்பிறைகிட்டே கேளு. அவ சொல்லுவா. அவதான் இந்த மாதிரியான ஜோக்குக்கெல்லாம் ஹோல் ஸேல் டீலர்” “என்கிட்டேயும் ஆல்மோஸ்ட் முடிஞ்சுது. ஊர்க்கு லெட்டர் எழுதி அக்காகிட்ட கேட்கணும்.” “தேடிப்பாரு... கிடைக்கும்...” “சரி... ஒரேயொரு ஜோக் மட்டும் இருக்கு. கொஞ்சம் பழசு. பரவாயில்லையா...?” “பரவாயில்லை. தூசு தட்டிட்டு சொல்லு...” இளம்பிறை சொன்னாள். “ஒரு சர்தார்ஜி ஷெல்ப் ட்ரைவ் பண்ணிக்கிட்டு வேகமா போயிட்டிருந்தார். வழியில் School Zone. Go Slow' என்கிற போர்டை பார்க்க நேர்ந்தது. உடனே காரின் வேகத்தைக் குறைத்து காரை மெதுவாய் ஓட்ட ஆரம்பித்தார். அப்போது நேரம் இரவு பதினோரு மணி.தும்பினாள் சூர்யா. “அம்மாடி! ரொம்ப தூசு. இவ்வளவு அரத பழசெல்லாம் வேண்டாம்... எனக்கு ஏற்கெனவே சைனஸ் ப்ராப்ளம்... இந்த தூசி தட்டற ஜோக்கெல்லாம் இனிமே வேண்டாம்.” வராந்தாவில் நடைச் சத்தம் கேட்டது. “வனிதா...! யார்ன்னு பாரு...?” வனிதா போய் எட்டிப் பார்த்துவிட்டு கையை உதறிக்கொண்டு உள்ளே வந்தாள். “அய்யய்யோ...” “என்னடி...?” “வார்டன்...” “வார்டனா...? இந்நேரத்துக்கு வரமாட்டாங்களே? இந்தியாவிலிருந்து யார்க்காவது ஏதாவது மெஸேஜ் வந்திருக்கலாம்?” வார்டன் க்யூரி தன் இரட்டை நாடி உடம்போடு அறை வாசலில் வந்து நின்றாள். “இளம்பிறை...!” “மேடம்...!” “என்னோடுவா...” இளம்பிறை குழப்பமாய் எழுந்தாள். “என்னவிஷயம் மேடம்...?” “இங்கே எதுவும் கேட்காதே... வா என்னோடு...” வார்டன் க்யூரி நடக்க ஆரம்பித்துவிட, இளம்பிறை தொடர்ந்தாள். பாதி வராந்தாவைக் கடந்திருந்தபோது மறுபடியும் கேட்டாள். “மேடம்! உங்கள் முகம் சரியில்லை. இந்தியாவிலிருந்து எனக்கு ஏதாவது கவலை தரும் செய்தியா?நான் இப்போது எதையும் பேசக்கூடிய நிலைமையில் இல்லை. உனக்காக போலீஸ் அதிகாரி ஒருவர் ஆபீஸ் அறையில் வந்து காத்துக் கொண்டிருக்கிறார்...” “போலீஸா...?” “எஸ்...” “எதற்கு...?” “போனால் தெரிந்துவிடும்...” “மேடம்...! எனக்கு பயமாய் இருக்கிறது.” “எதற்கு பயம்...? இது ஒரு விசாரணைதான்” இளம்பிறைக்கு வியர்த்துக் கொட்டியது. 'போலீஸ் எதற்காக என்னை விசாரிக்க வேண்டும்...?’ ஆபீஸ் அறை வந்தது. கருநீல யூனிஃபார்ம் அணிந்த அந்த ந்யூயார்க் போலீஸ் அதிகாரி காரட் நிற முகத்தோடு நாற்காலிக்கு சாய்ந்திருந்தார். இளம்பிறையைப் பார்த்ததும் கலைந்தார்
© 2024 Pocket Books (Ebook): 6610000510887
Release date
Ebook: 13 January 2024
Tags
English
India