Step into an infinite world of stories
டாக்டர் தாராசந்திரிகா கடைசி நோயாளியைப் பார்த்து வாஷ்பேசினில் கைகளை லிக்விட் சோப்பால் கழுவிக் கொண்டிருந்தபோது நர்ஸ் எட்டிப் பார்த்தாள். “டாக்டர்...’’ “என்ன...?’’ “உங்களைப் பார்க்க சுவர்ணான்னு ஒரு பொண்ணு வந்திருக்காங்க... ஏதோ பர்சனலா பேசணுமாம்...’’ “சுவர்ணா...?’’ “ஆமா டாக்டர்...” “வயசு எவ்வளவு இருக்கும்...?” “முப்பது இருக்கலாம்... பெரிய இடத்து பொண்ணு மாதிரி தெரியுது. டாட்டா சியாராவில் வந்திருக்காங்க.” தாராசந்திரிகா மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேஜையின் மேல் வைத்துவிட்டு தன் நெற்றிப் பொட்டை பத்து விநாடிகள் யோசனையில் தேய்த்துவிட்டு நர்ஸைப் பார்த்து தலையாட்டினாள். “வரச்சொல்லு...’’ பேஷண்ட்டை அனுப்பிவிட்டு தாராசந்திரிகா காத்திருக்க, அந்த நிமிஷம் கரைவதற்குள் பாலிஷ் துணியால் தேய்த்த ஆப்பிள் பழம் போல் அந்த சுவர்ணா தள்ளு கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். “வணக்கம் டாக்டர்...’ “வணக்கம்!” கைகளைக் குவித்துக் கொண்டே தாராசந்திரிகா அவளை ஏறிட்டாள்.முப்பது வயதுக்குரிய சுவர்ணா எலுமிச்சை நிறத்தில் சதைபோட்டு மினுமினுப்பாய் தெரிந்தாள். கழுத்தில் ஒரு வைர நெக்லஸ் அநியாயத்துக்கு டாலடித்தது. மெருன் வண்ண ஃபாரின் சில்க் புடவைக்கு உடம்பைக் கொடுத்து அதே வண்ணத்தில் ஜாக்கெட் தரித்திருந்தாள். “ப்ளீஸ் ஸீட்டட்...’’ டாக்டர் எதிரில் இருந்த நாற்காலியைக் காட்ட “தாங்க்ஸ்” சொல்லி உட்கார்ந்த ஸ்வர்ணா ஒரு சின்னப் புன்னகையோடு கேட்டாள், “டாக்டர் என்னை உங்களுக்குத் தெரியுதா?’’ “தெரியலையே...” “கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாருங்க...’’ தாராசந்திரிகா ஸ்வர்ணாவின் முகத்தை உன்னித்துப் பார்த்தாள். பின் தன் தலையை மெல்ல ஆட்டினாள். “தெரியலையே...?” “மறந்துட்டீங்க போலிருக்கு... நீங்க நிர்மலா காலேஜ்லதானே படிச்சீங்க...?” “ஆமா...” “பி.எஸ்.ஸி... படிச்சுட்டு அதுக்கப்புறமா மெடிக்கலுக்கு போனீங்க இல்லையா...?’’ “ஆமா...’’ “நீங்க பி.எஸ்.ஸி படிக்கும்போது உங்க கூட பவ்யா படிச்சது ஞாபகம் இருக்கா டாக்டர்...?” “பவ்யா...? ம்... ஞாபகம் இருக்கு. வீடு கூட ராம்நகர்ல...’’ “கரெக்ட் டாக்டர்... அதே பவ்யாதான்... பவ்யா எனக்கு அக்கா...’’ தாராசந்திரிகாவின் முகம் ஒரு மலர்ச்சிக்கு உட்பட்டது. “நீ... அந்த பவ்யாவோட சிஸ்டரா...?” “ஆமா டாக்டர்... ரெண்டாவது தங்கை“மைகுட்னஸ்...! நீ பவ்யாவோட சிஸ்டரா...? கொஞ்சம் கூட அடையாளமே தெரியலையே... பனிரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி பார்த்தது. அக்கா இப்போ எங்கே இருக்கா...?” “அபுதாபியில, மாப்பிள்ளை என்ஜீனியர்... இந்தப் பக்கம் வர்றதே கிடையாது... ரெண்டாவது சிஸ்டர் பம்பாய்ல இருக்கா. அவளோட ஹஸ்பெண்ட் பிசினஸ்மேன்...’’ “அப்பா... அம்மா...?’’ “கிராமத்துல இருக்காங்க...’’ “உன்னைப் பத்தி சொல்லலையே...?” “எனக்கு கல்யாணமாகி ஏழு வருஷமாச்சு டாக்டர். கணவன் பிசினஸ்மேன். பேரு ஆதிநாராயணன். ஆதி க்ரூப்பைப் பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க...” “ஆமா தெரியும்...” “அந்த ஆதி க்ரூப்ஸ்க்கு எம்.டி. என் கணவர்தான்.” “ஆதி க்ரூப்ஸ் வெரி வெல் நோன் க்ரூப்பாச்சே! இன்னிக்கு ஷேர் மார்க்கெட்ல டாப் ரேட்ல இருக்கிறது அந்த க்ரூப்தானே...?” “எஸ் டாக்டர்... எனக்கு கிடைச்சிருக்கிற கணவரும் ஒரு ஜெம்தான். கல்யாணமானதிலிருந்து இதுவரைக்கும் நான் கண் கலங்கியது கிடையாது. என்னோட கணவர் காட்ற அன்பில் நிறையத் தடவை திக்கு முக்காடிப் போயிருக்கேன்...” “குட்... குட்... கேட்கவே சந்தோஷமாயிருக்கு. ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையில இந்த சந்தோஷத்தைக் காட்டிலும் வேற எது வேணும்...’’ “யூ... ஆர் கரெக்ட் டாக்டர்... பட் கடந்த ஒரு மாச காலமா என்னால சந்தோஷத்தை அனுபவிக்க முடியலை...’’ “ஏன்?” “மனசுக்குள்ளே ஒரு திகில் நுழைஞ்சிருக்கு.
© 2024 Pocket Books (Ebook): 6610000530212
Release date
Ebook: 8 February 2024
Tags

English
India