Step into an infinite world of stories
செளம்யா மறுபடியும் அந்த விளம்பர வாசகங்களை படித்தாள். “உங்களிடம் நல்ல ஜாதி வைரங்கள் இருக்கிறதா...? கேட்கும் விலை கொடுத்து வாங்க ஆர்வமாய் உள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வரவும். கடிதத் தொடர்போ - டெலிபோன் பேச்சோ - வேண்டாம். எந்த நேரத்திலும் சந்திக்க வேண்டிய முகவரி: எம்.அடிசன், நம்பர் தர்ட்டி டூ, ரெயின்போ மிஸ்ட் ஹில், குன்னூர்.” அவள் விளம்பரத்தைப் படித்துவிட்டு நிமிர்ந்தபோது - லட்சுமி அம்மாள் அந்த ஃபைலை புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. “மேடம்...” “அந்த விளம்பரத்தைப் படிச்சியா...?” “ப... படிச்சேன்…” “அந்த அடிசனைப் பார்க்க நீதான் போகப் போறே... கார்லதான். டிரைவர் உன்கூட வருவான்...” சௌம்யா உட்கார்ந்திருக்க லட்சுமி அம்மாள் தொடர்ந்தாள். “நீ அடிசனைச் சந்திச்சு சொல்ல வேண்டியதெல்லாம் இதுதான்... நல்ல ஜாதி வைரங்கள் இருக்கு... எப்ப வேணுமின்னாலும் பார்க்க வரலாம். வியாபாரம் ரகசியமாய் முடிய வேண்டும். யார்க்கும் தெரியக்கூடாது…” “மேடம்...” “சொல்லு...” “விளம்பரம் குடுத்திருக்கிற அந்த அடிசன் எப்படிப்பட்டவர்ன்னு தெரியாமே... நாம மூவ் பண்றது சரியா மேடம்…?”லட்சுமி அம்மாள் தன் ஆரோக்கியமான பற்களைக் காட்டி புன்னகைத்தாள். “அந்த சந்தேகம் உனக்கு வரும்னு தெரியும். அடிசன் ரொம்பவும் நல்லவர். அற்புதமான ஜெம்மாலிஸ்ட்...” “மேடம்! நீங்க அவரை...” “பார்த்திருக்கேன்... போயிருக்கேன்... பழகுறதுல அடிசன் ரொம்பவும் இனிமையானவர்... கார்ல இங்கிருந்து குன்னூர் போக ரெண்டு மணி நேரம். அடிசன் கிட்டே ஒரு அரை மணி நேரப் பேச்சு... திரும்பவும் ரெண்டு மணி நேர பயணத்துல நீ இங்கே வந்துடலாம்... என்ன சொல்றே...?” “சரி... சரி... மேடம்...” “உன் முகத்துல சந்தோஷத்தைக் காணும். பயப்படறியா...?” “இல்ல மேடம். போய்ட்டு வர்றேன்...” “நீ எதுக்காக போறன்னு டிரைவருக்கு தெரியக்கூடாது. விஷயம் சுமுகமா இருக்கணும்...” “எஸ் மேடம்.” “நான் சொல்ற பேரையெல்லாம் நோட் பண்ணிக்க.” சௌம்யா ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொள்ள லட்சுமி அம்மாள் கையில் வைத்திருந்த ஃபைலைப் புரட்டியபடியே சொன்னாள். “கிம்பர்லி-37, ஸோபியா-70, எட்டாரா-55, நீலாம்பர்-66.” சௌம்யா குறித்துக் கொண்டதும் சொன்னாள். “இதெல்லாம் நம்மக்கிட்டே இருக்கிற டயமண்ட்ஸோட ஜாதிப் பெயர்கள். அடிசன் கேட்கும்போது அவர்கிட்டே சொல்லணும்.” “எஸ் மேடம்.” “போய் டிபன் சாப்பிட்டு கிளம்பு.” சௌம்யா எழுந்தாள்கார் குன்னூரைத் தொட்டபோது ஒன்பதரை மணி. சூரியன் வானத்தில் இருந்தாலும் குளிர் உறைத்தது. ஜனங்கள் ஸ்வெட்டர்களோடும்; கம்பளி, குல்லாக்களோடும் நடந்து போனார்கள். ப்ளம்ஸும் வால்பேரியும் தள்ளுவண்டிகளில் நிரம்பியிருந்தன. ஊட்டி போகும் டூரிஸ்ட் பஸ்களில் வடநாட்டு முகங்கள் இந்தி சம்பாசணைகளோடு தெரிந்தன. “டிரைவர்!” டிரைவர் திரும்பி செளம்யாவைப் பார்த்தாள். “உங்களுக்கு ரெயின்போ மிஸ்ட் ஹில் தெரியுமா?” “தெரியாதம்மா... நானே உங்ககிட்ட கேக்கலாம்னு இருந்தேன்...” “சரி! அந்த டிராபிக் கான்ஸ்டபிள்கிட்டே கேப்போம்... வண்டியை அவர் பக்கமா கொண்டு போ...” டிரைவர் கொண்டு போனான். டிராபிக்கை ஒழுங்குபடுத்த மறந்துவிட்டு - ஒரு பழக்கூடைக்காரியிடம் ராத்திரி பார்த்த சினிமாவைப் பற்றி கமெண்ட் அடித்து – சிரித்துப் பேசிக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் - செளம்யா, “எக்ஸ்க்யூஸ் மீ” என்று விளிப்பதைக் கேட்டதும் திரும்பினார்
© 2024 Pocket Books (Ebook): 6610000530373
Release date
Ebook: 11 February 2024
Tags

Overall rating based on 4 ratings
Thrilling
Smart
Heartwarming
Download the app to join the conversation and add reviews.
Showing 1 of 4
SRINI
8 Sept 2024
Amazing.
English
India