Step into an infinite world of stories
மாருதியை போர்டிகோவுக்குள் கொண்டு போய் அடக்கி கீழே இறங்கின மகளை ஆர்வமாய் எதிர்கொண்டார் சத்தியநாராயணன். பப்ளிமாஸ் நிற வழுக்கை மண்டைக்கு நடுவில் வெள்ளி இழைகளாய் நான்கைந்து நரைமுடிகள் திசைக் கொன்றாய் கோபித்துக் கொண்டு நிற்க தன் பெரிய சைஸ் மூக்கின் மேல் வெள்ளி பிரேமிட்ட கண்ணாடியை உட்கார்த்தி வைத்திருந்தார். “என்னம்மா வர்ணா... போன காரியம் என்னாச்சு...?” “சக்சஸ்தாம்பா...?” “எவ்வளவு வெச்சு பாக்டரியை எடுத்தே...?” “இருபத்தஞ்சு லட்சம்...' “மோசமில்லை. இன்னிக்கி இருக்கிற நிலவரப்படி அந்த ஏரியாவில் ஒரு செண்ட் அறுபதாயிரத்துக்கு போகும்... சீப்தான்...! மாப்பிள்ளை என்ன சொன்னார்.” “உங்க மாப்பிள்ளைதானே... ரொம்ப கோபப்பட்டார். உன்னை இங்கே யார் வரச் சொன்னதுன்னு கத்தினார்... நான் வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டேன்... வரமாட்டேனுட்டார்...” “சரி... உன்னோட அடுத்த ஸ்டெப் என்னம்மா வர்ணா...?” ஹாலில் நடந்து போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டே கேட்டார் சத்தியநாராயணன். “அடுத்த வாரத்துல ஏதாவது ஒருநாள். அந்த பாக்டரியை எம்பேர்க்கு மாத்தின டாக்குமென்டரியோட அவர் வீட்டுக்குப் போகப் போறேன். பல்லு பிடுங்கின சிங்கம் மாதிரி இருக்கிற அவரை என்னோட வழிக்கு கொண்டுட்டு வரப்போறேன்... நீங்க யு.எஸ்.ஏ. போயிட்டு திரும்பி வர்றப்போ... உங்க மாப்பிள்ளை என்கிட்டகையேந்திகிட்டு நின்னுட்டிருப்பார்... உங்க நெடுநாளைய ஆசைப்படி அவரை நம்ம பாக்டரிக்கு ஒரு ஜி.எம். போஸ்ட்டுக்கு இழுத்துக்கலாம்...” “எனக்கென்னமோ நம்பிக்கையில்லேம்மா...” “எனக்கிருக்கு...” “அப்பாவும் மகளும் இப்படி நடந்துக்கிறது கொஞ்சம் கூட சரியில்லை. “பின்பக்கமாய் எழுந்த உஷ்ணமான குரலைக் கேட்டு இருவரும் திரும்பினார்கள். அம்மாக்காரி பூரணி கோப முலாம் அடித்த முகத்தோடு நின்றிருந்தாள். வர்ணா சிரித்தாள். “நீ சப்போர்ட் பண்ணி பேசற மாப்பிள்ளை இன்னிக்கு எங்கே உட்கார்ந்திருந்தார்ன்னு தெரியுமாம்மா...? பாக்டரி கேட்டுக்குப் பக்கத்துல டைம் ஆபீஸையொட்டின மாதிரி ஒரு நாற்காலியைப் போட்டுகிட்டு உட்கார்ந்திருந்தார். அவர் கண் முன்னாடியே பாக்டரியோட மானத்தை கொஞ்சம் கொஞ்சமா ஏலம் போட்டுகிட்டு இருந்தாங்க...” “அவரை அந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே... நீயும் உங்கப்பாவும் தாண்டி. அந்த நல்ல மனுஷன் உன் கழுத்துல தாலி கட்டின பாவத்துக்காக நாய் படாத பாடு பட்டுட்டார். உங்க அப்பாவோட பாக்டரியையும் கம்பெனியையும் நிர்வாகம் பண்ண அவர் வர மறுத்துட்டார்ங்கிற ஒரேயொரு காரணத்துக்காக அவரை இப்படி நடுத்தெருவுக்கு கொண்டு வந்து மானத்தை வாங்கறது நியாயமா... வர்ணா...” “அம்மா...” “என்னடி...?” “உன்னோட அழகான மாப்பிள்ளைக்கு நல்லது தானே பண்ணியிருக்கோம். ஏலத்துல யார் கைக்கோ போக இருந்த... அவரோட மெட்டல் பாக்டரியை மீட்டுகிட்டு வந்தது தப்புன்னு சொல்றியா?”“ஒரு ஆம்பிளையை இதைவிட அழகா அவமானப்படுத்தவே முடியாது வர்ணா. அவர் உனக்கு அடங்கிப் போகணும்ன்னு நீ நினைக்கிறியே... அது மகா தப்பு. உங்க அப்பா குடுக்கிற செல்லத்துல நீ ரொம்பவும் துள்ளறே... இந்த துள்ளலுக்கெல்லாம் எப்பவாவது ஒரு நாள் நீ அனுபவிக்கப் போறே...” “அப்பா...” “என்னம்மா...?” “அம்மா... சாபம் தர்றா...” “அவளுக்கு சொந்த ஊர் திருக்குவளை. புருஷன் காலடிபட்ட மண்ணை எடுத்து நெத்திக்கு இட்டுக்கிற கிராமத்து பஞ்சாங்கம்...” பூரணி வெடித்தாள். “ஆமாங்க... நான் பஞ்சாங்கம்தான். அந்த பஞ்சாங்கத்துல என்னென்ன எழுதியிருக்கோ அதைத்தான் வெள்ளைக்காரனும், ஜப்பான்காரனும் இப்போ புதுசு புதுசா கண்டு பிடிச்சிட்டு வர்றான். ஆம்பிளையை எப்படி வேணும்ன்னாலும் வளர்த்து உட்டுடலாங்க... ஆனா பொண்ணை இப்படித்தான் வளர்க்கணும்ன்னு ஒரு வரைமுறை இருக்குங்க... அவளுக்கு கொம்பு சீவி மாப்பிள்ளை மேலேயே பாய விடறது உங்களுக்கு நியாயமா படுதா...?” “வர்ணா... உங்கம்மா லெக்சர் அடிக்க ஆரம்பிச்சுட்டா. நீ சாவகாசமா உட்கார்ந்து கேளு... நான் கம்பெனிக்கு புறப்படறேன்... பாரின் டூர் கிளம்பறத்துக்குள்ளே சில பைல்ஸையெல்லாம் பார்க்கணும்...” சொல்லிக் கொண்டே போர்டிகோவில் நின்றிருந்த காரை நோக்கிப் போனார் சத்திய நாராயணன். வர்ணா அலட்சியமாய் கூந்தலை கோதிக் கொண்டே தன் அறைக்கு போக முயன்றாள்
© 2024 Pocket Books (Ebook): 6610000510801
Release date
Ebook: 13 January 2024
Tags

English
India