Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

முள் கிரீடம்! and ஓடும் வரை ஓடு!

5 Ratings

3.2

Language
Tamil
Format
Category

Crime

அண்ணன் நட்ராஜ் நின்றிருந்த தோரணையும், ‘யார்டி அவன்?’ என்று குரலை ஒரு மாதிரி இழுத்துக் கேட்ட விதமும், செளந்தர்யாவின் வயிற்றில் ஓர் அவஸ்தையான ரசாயனக் கலவையை ஏற்படுத்த... கையில் வைத்திருந்த தண்ணீர் பாத்திரம் தானாய் நழுவியது. “டிங்… டிணார்…” “அ... அண்ணா...!” செளந்தர்யாவின் பெரிய விழிகள் நட்ராஜ் முகத்திலேயே திகைத்து நின்றது. நெற்றியிலும் மேலுதட்டிலும் அவசர அவசரமாய் அரும்பிவிட்ட வியர்வைச் சரங்கள் - வழிய நேரம் பார்த்தன. “அவன் யார்ன்னு கேட்டேன்...” “வ... வந்து... வந்து...” “பாத்திரம் விழுந்த சத்தம் கேட்டு - அறைக்குள் எட்டிப் பார்த்த சிவசாமி செளந்தர்யாவின் நிலைமையைப் பார்த்ததும் - முகம் மாறினார்.” “டேய், என்னடா நடந்தது?” அப்பாவைப் பொருட்படுத்தவில்லை நட்ராஜ். வாயில் இருந்த டூத் பேஸ்ட் நுரையை - சமையலறை ஜன்னல் வெளியே - தோட்டத்துச் செடிகள் மீது உமிழ்ந்து விட்டு செளந்தர்யாவின் பக்கம் கண்கள் சிவக்க திரும்பினான். “யாரவன்?” எச்சில் விழுங்கினாள். “காதலிக்கிறாயா?”“ஆ... ஆமா...” சொல்லி முடிப்பதற்குள் உடம்பு பூராவும் சில்லிட்டுப் போன மாதிரியான உணர்வு. “எத்தனை நாளா?” “மூ... மூணு மாசமா...” “அவன் பேர் என்ன?” “வ... வ... வருண்.” “என்ன ஜாதி?” “ந... நம்ம... ஜாதிதான்.” ‘என்ன... அண்ணன் இவ்வளவு நிதானமாய் பேசிக் கொண்டிருக்கிறார்?’ என்று செளந்தர்யா நினைத்த விநாடி – நட்ராஜ் கத்தினான். “ரோகிணி! என் பெல்ட்டைக் கொஞ்சம் எடுத்துட்டு வா.” அந்தக் கத்தலுக்காகவே காத்திருந்த மாதிரி ரோகிணி சமையலறைக்குள் நுழைந்தாள். கையில் பாம்பு சட்டை உரித்த மாதிரியான பெல்ட். சிவசாமி பதறிப்போய் - நட்ராஜின் தோளைப் பற்றினார் “டேய்ய்...!” “அப்பா! இவளைக் காலேஜுக்கு அனுப்பக் கூடாதுன்னு நான் முடிவு பண்ணினப்ப நீங்க என்ன சொன்னீங்க? ‘செளந்தர்யா படிக்க ரொம்பவும் ஆசைப்படறா. படிக்க வையேண்டா’ன்னு சொன்னீங்க. உங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு காலேஜுக்கு அனுப்பினேன். இப்ப இவ என்ன காரியம் பண்ணியிருக்கா தெரியுமாப்பா? இவ படிக்க ஆசைப்பட்டிருக்கா - ஆம்பிளை சுகத்துக்காக.” “டேய், நிறுத்துடா. பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டுப் போகாதே. இந்த வயசுல இதெல்லாம் சகஜம். அந்தப் பையன் யாரு, என்னான்னு விசாரிப்போம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த குடும்பமாய் இருந்தா...” “சம்பந்தம் பேசலாம்னு சொல்றீங்களா?ஆமா! பையன் நம்ம ஜாதின்னு செளந்தர்யா சொல்லிட்டா. ஜாதி பிரச்னை ஓவர். வேற ஏதாவது பிரச்னைகள் இருக்கான்னு பார்த்துட்டு...” ரோகிணி குறுக்கிட்டாள். “உங்க அப்பா பேசறதைப் பார்த்தீங்களா! பொண்ணைக் கையும் களவுமாக பிடிச்சுக் குடுத்திருக்கோம். இத்தனை குடித்தனங்கள் இருக்கிற தெருவுல, நெஞ்சில கொஞ்சம் கூட பயம் இல்லாமே, காலங்காத்தால வீட்டு வாசலுக்கு முன்னாடி ஒருத்தனோட உங்க பொண்ணு பேசிண்டிருக்கான்னு சொன்னா, நாம சொன்னதைக் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் பொண்ணோட கல்யாணத்தைப் பத்திப் பேசிட்டிருக்கார்.” வந்த இருமலை அடக்கிக் கொண்டு சிவசாமி பேசினார். “வேற என்னம்மா பண்றது? உன் புருஷன் மாதிரி என் பொண்ணை என்னால் பெல்ட்டால் அடிக்க முடியாது. அந்த இருதயமும் எனக்கு இல்லை. அப்படி அடிக்கச் சொல்லி பெல்ட்டைக் கொண்டு வந்து குடுக்க என் பெண்டாட்டியும் உயிரோடு இல்லை.” “பார்த்தீங்களா, உங்கப்பா பேசற குத்தல் பேச்சை?” நட்ராஜ் ரோகிணியை ஏறிட்டான். “இப்ப பேசிட்டிருக்கிறது எங்க அப்பா இல்லை ரோகிணி. பேங்க்ல அவர் தன் பொண்ணு கல்யாணத்துக்காக போட்டு வெச்சிருக்கிற இரண்டு லட்ச ரூபாய் டெபாஸிட் பணம்... அவராச்சு, அவர் பொண்ணாச்சு. எப்படியோ போகட்டும். என்னைப் பெத்த கடனுக்காகவும், என் கூடப் பொறந்த பாவத்துக்காகவும் இரண்டு பேர்க்கும் சோத்தைப் போட்டுடறேன்.” “டேய்! என்ன பேச்சுடா பேசறே.” “இதோ பாருங்கப்பா. நீங்க ஒரு ஸ்கூல் ஹெட் மாஸ்ட்ரா இருபது வருஷம் ஒர்க் பண்ணி ரிட்டையரானவங்க. உங்களுக்கெல்லாம் புத்தி சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லை. நீங்களாச்சு, உங்க பொண்ணாச்சு. அவ காதலிக்கிற பையன் யார்ன்னு கேட்டு, கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பண்ணுங்க. அண்ணன் அண்ணிங்கிற முறையில் நாங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு வர்றோம். கலந்துக்கிறோம்.கையிலிருந்த பெல்ட்டை அறையின் மூலையை நோக்கி ஆத்திரமாய் வீசிவிட்டு நட்ராஜ் வெளியேற - ரோகிணி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கணவனைப் பின்தொடர்ந்தாள். அவர்கள் போவதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சிவசாமி தன் பாதங்களை மெத்தென்று தாக்குகிற ஓர் உணர்ச்சியில் கீழே குனிந்து பார்த்தார்.

© 2024 Pocket Books (Ebook): 6610000530205

Release date

Ebook: 8 February 2024

Others also enjoyed ...