Step into an infinite world of stories
ப்ரதாப் உலுக்கியதில் சட்டென்று கண் விழித்தாள் அஞ்சலா. பேசிக்கொண்டே வந்தவள் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே ஞாபகம் இல்லை. ப்ரதாப்பின் தோளில் தலையை சாய்த்து - உட்கார்ந்திருந்தபடியே தூங்கி விட்டிருந்தாள். ட்ரெயின் வேகமாய்த் தடக்கிக் கொண்டு இருந்தது. இரண்டு பக்கமும் ஜன்னல்களுக்கு வெளியே அடர்த்தியாய் இருட்டு. கொஞ்சமாய்த் திறந்திருந்த ஷட்டர் வழியே ஐஸ் தடவின காற்று ஜில்லென்று கம்பார்ட்மென்ட்டுக்குள் பாய்ந்து - உடம்புக்குள் ஊசியாய் ஏறியது. அஞ்சலா கண்களை தேய்த்துக் கொண்டே கேட்டாள். “நல்லூர் வந்தாச்சா?” “நெருங்கிட்டோம்...” “மணி எத்தனை...?” “பதினொன்னு பத்து...” “இதுக்கு முன்னாடி அந்த ஊருக்குப் போன தில்லைன்னு சொன்னீங்க இல்லையா?” “ஆமா.” “புதுசா அந்த ஊருக்குள்ள இந்த ராத்திரில இறங்கி... எங்காவது எசகுபிசகா மாட்டிக்கப் போறோம் பிரதாப்...” “டோண்ட் ஒர்ரி! நான் எல்லா விபரமும் விசாரிச்சிட்டு தான் புறப்பட்டேன். ரெயில்வே ஸ்டேஷன் வாசல்லயே ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கு... அந்த ஸ்டாண்ட்ல எத்திராஜ்ன்னு கேட்டா எல்லோருக்குமே தெரியும்... நேராஅவர் வீட்ல கொண்டு போய் விட்டுருவாங்க... எதுக்கும் இருக்கட்டுமேன்னு... ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து அவர் வீட்டுக்கு போற வழியை படம் போட்டு வாங்கி வச்சிருக்கேன்... இவ்வளவு ரிஸ்க் எடுத்து வர்றோம்... அதுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யாம வந்துருவேனா?” “உங்க மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு...! காலைல எத்திராஜ்க்கு ஃபோன் பண்றதா சொன்னீங்களே... பண்ணினிங்களா?” “பண்ணினேன். அவர் நமக்காக காத்திட்டிருக்கிறதா சொன்னார்.” அடுத்த அரை மணி நேர பயணத்திற்குப் பிறகு - ஜன்னலுக்கு வெளியே இருந்த அடர்த்தியான இருட்டுக்கு நடுவே - சில வெளிச்சப் புள்ளிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. ரயிலின் வேகம் குறைந்திருந்தது. ப்ரதாப் எழுந்து கொக்கியில் மாட்டியிருந்த ஹேண்ட்பேகைக் கையில் எடுத்துக் கொண்டான். “அஞ்சலா... ஸ்டேஷன் வந்தாச்சுன்னு நினைக்கறேன்...” “இங்கே எவ்வளவு நேரம் நிக்கும்...?” “ரெண்டு நிமிஷம்ன்னு சொன்னாங்க. ரயிலில் பிரேக் பிடிக்கும் சப்தம், எண்ணெய் வறண்ட கேட் திறப்பது போல் 'ரீச்' சென்று தண்டவாளத்தில் எதிரொலித்தது. தொடர்ந்து - ட்யூப் லைட் வெளிச்சங்களும் - பிளாட்பாரமும் கண்ணில் விழுந்தன. அஞ்சலாவும் பிரதாப்பும் கம்பார்ட்மென்டின் கதவு அருகே வந்தார்கள். அவர்களைத் தவிர நாலைந்து பேர் அந்த ஸ்டேஷனில் இறங்குகிற முஸ்தீபுகளில் இருந்தார்கள். ரயிலின் இயக்கம் மெல்ல மெல்லக் குறைந்து சைபராகியதுமற்ற ஆசாமிகள் இறங்கியதைத் தொடர்ந்து அஞ்சலாவும், பிரதாப்பும் ப்ளாட்பாரத்துக்கு வந்தார்கள். சின்ன ஸ்டேஷன் போலத்தான் தோற்றமளித்தது. ஒரே ஒரு ஆள் மட்டும் 'காபி... காபி' என்று கத்தியபடி கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்டாய் - சென்று கொண்டிருக்க - மற்றபடி நிசப்தம். “காப்பி சாப்பிடறியா அஞ்சலா...?” “ரயில்வே ஸ்டேஷன் காபிக்கு அந்த குழாய் தண்ணியே பெஸ்ட்.” கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டரின் அறையைக் கடந்தார்கள். குறுகலான வெளியேறும் வழியில் நுழைந்து ஸ்டேஷன் வாசலைத் தொட்டார்கள். நேர் எதிரே சில ஆட்டோக்கள் முகத்தைக் காட்டிக் கொண்டு தெரிந்தன. அதற்கு அப்பால் ஜிப்சி கூட்டங்கள் வானமே கூரையாய் உருண்டிருந்தார்கள். ஆட்டோ ஸ்டாண்டை நெருங்கினார்கள். பின் சீட்டில் சுருண்டு படுத்திருந்த டிரைவரைத் தட்டி எழுப்பினான் ப்ரதாப். டிரைவர் சிலுப்படித்துப் போன கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டு எழுந்தார். சாராய நெடி நாசிக்குள் மூர்க்கமாய் இறங்கியது. கிருதாவை நோக்கிப் போன மீசையும், கழுத்தில் மாட்டியிருந்த தாயத்துக் கயிறும் ரெளடித் தனம் கொடுத்தது. “எங்க போகணும்...?” பிரதாப் இடத்தைச் சொன்னதும் - நிமிர்ந்தார். “எத்திராஜ் வீட்டுக்கா...!” கேட்டுக் கொண்டே அஞ்சலாவை மேலும் கீழும் பார்த்தார்... அஞ்சலா ப்ரதாப்பின் கையைப் பற்றிக் கொண்டாள். அவன் தோளோரம் கிசுகிசுத்தாள்
© 2024 Pocket Books (Ebook): 6610000530366
Release date
Ebook: 8 February 2024
Tags

Overall rating based on 3 ratings
Download the app to join the conversation and add reviews.
English
India