Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

வெல்கம் டூ மார்ச்சுவரி

10 Ratings

3.9

Language
Tamil
Format
Category

Crime

பம்பாய். விவேபார்லே - ஏரியாவின் கரம்சந்த் ரோடு, ஐந்தாம் எண்ணிட்ட பங்களாவுக்குள்ளே - டெலிபோனில் உற்சாகம் கொப்பளிக்க பேசிக் கொண்டிருந்தாள் மாயா. காலை ஏழுமணியாகியும் நைட் கவுனில் இருந்த மாயாவுக்கு - பம்பாய் மண்ணுக்கே உரித்தான டால்டா உடம்பு. “சுனில்! ஜூஹீ பீச் அலுத்துப் போச்சு... இன்னிக்கு எலிபெண்டா கேவ்ஸ் போகலாமா...?” “எலிபெண்டா கேவ்ஸ் மாத்திரம். என்னவாம்...? ஏழெட்டு தடவை போயிட்டோமே...?” “சரி... இன்னிக்க கமலா பார்க்...” “வேண்டாம்... அங்கே ரௌடீஸ் வந்து - மட்டமான பொண்ணுகளோடு படுத்துட்டு...” “சொல்லாதே! வேற எங்கேதான் போறதாம்...?” “நான் ஒரு இடம் சொல்வேன். நீ தட்டக்கூடாது.” “சொல்லு?” “நாரிமன் பாயிண்ட் போயிடலாம்.” “அங்க... என்ன இருக்கு?” “காட்டேஜஸ் இருக்கு. எல்லாமே கடலைப் பார்த்த மாதிரி வ்யூ. சுத்திலும் தென்னைமரக் கூட்டம்...” “காட்டேஜெல்லாம் வேண்டாம்.” “ஏன்...?” “நீ சும்மா இருக்க மாட்டே?என்ன பண்ணுவேணாம்?” “வயித்துல வாரிசோட உன் பக்கத்துல உட்கார்ந்து தாலியைக் கட்டிக்கும்படியா பண்ணிடுவே...” “சேச்சே! நா... என்ன அவ்வளவு மட்டமானவனா?” உன்னைப்பத்தி எனக்கு தெரியாதாக்கும்.” “சரி யுவர் சாய்ஸ் ஈஸ்... ஓ.கே... எலிபெண்டா கேவ்ஸே போயிடலாம்... கேட் வே, ஆஃப் இண்டியாவுக்கு எத்தனை மணிக்கு வர்றே...?” “ஷார்ப்பா நைன்... ஓ... கிளாக்...” “உன்னுடைய மதிப்பிற்குரிய மாமா - கம் - கார்டியன் - கம் - லாயர் செல்வநாயகம் உன்னை வெளியே போக அலவ் பண்ணுவாரா...?” “வழக்கம்போல ஒரு மகத்தான பொய்யைச் சொல்லிட வேண்டியது தான்...” “லேட் பண்ணிடாதே...” “8.55 க்கு இருப்பேன், போதுமா?” “போதும்... போதும்...! ரிஸீவரை வெக்கிறதுக்கு முன்னாடி ப்ளீஸ் ஒரு கிஸ்.” “இன்னும் பல் தேய்க்கலை.” “பரவால்ல குடு... இச்...” “சே! ரிஸுவரே ஈரமாயிடுச்சு...” “யூ... நாட்டி...” - ரிஸீவரை கவிழ்த்த மாயா அறைக்குள், மாமா தெய்வநாயகம் நுழைவதைப் பார்த்து - “குட்மார்னிங் அங்கிள்” “குட்மார்னிங் மை பேபி...”கட்டிலின் நுனியில் உட்கார்ந்த தெய்வநாயகத்திற்கு ஐம்பது வயது உடம்பு மீசையும் காதோற கிருதாக்களும் அவசரமாய் நரைத்திருக்க - தலையில் பாதி முடி இன்னமும் இருந்தது. உடம்பில் சதை தளராமல் இறுக்கமாய் தெரிந்தது. இந்த நிமிஷம் ஜாக்கிங் ட்ரஸ்ஸில் இருந்தார். “என்ன அங்கிள்... இவ்வளவு லேட்டா ஜாக்கிங் போறீங்க...?” “ராத்திரி லேட் நைட் பெட். எந்திரிக்க நேரமாயிடுச்சு...” “பம்பாய் சூரியன் இந்நேரத்துக்கு சுள்ளுனு இருப்பானே...? ஜாக்கிங் வேண்டாமே அங்கிள்...” “இல்ல… பேபி... நான். வெளியே போகலை. தோட்டத்தைச் சுத்தித்தான் ஓடப்போறேன்...” “அப்படீன்னா சரிதான்...” ஆமா... போன்ல யார் கூட பேசிட்டிருந்தே...?” “சாராகிட்டே...” “விடிஞ்சா போதும்... அந்த சாரா டயலைச் சுத்திடுவாள...” “அங்கிள்! சாராவோட்ட அக்காவுக்கு இன்னிக்கு பர்த்டேயாம். ஒன்பது மணிக்கு சின்ன பார்ட்டியாம். வரச் சொல்றா…” “காலேஜ் இன்னிக்கு லீவ்தானே?” “ஆமா...” “போய்ட்டு வா...” “மத்தியானம் லஞ்ச்சும், அவங்க வீட்ல தான்...” “அப்படின்னா... சாயந்தரம் தான் வருவே?” “ஆமா அங்கிள்...சரி, நான் தோட்டத்தைச் சுத்தறேன். நீ குளிக்க கிளம்பு உங்கப்பா உயிரோடு இருந்த காலத்துல... ஏழுமணிக்கு மேல பெட்ல, யாராவது படுத்திருந்தா அவருக்கு துர்வாச கோபம் வந்துடும். அவ்வளவு பெரிய மனுவன் வாயிலிருந்து - பேட்டை ரெளடி மாதிரி கெட்ட வார்த்தையா கொட்டும்...” சொல்லிக்கொண்டே எழுந்து போனார் தெய்வநாயகம்... மாயா குளியலறைக்குள் புகுந்தாள்முழுசாய் அரை மணி நேரத்திற்குப் பிறகு, குளித்து முடித்து - டவலை மார்புக்கு மேல் முடிச்சிட்டுக் கொண்டு குளியலறையினின்றும் வெளிப்பட்டு - அறைக்கதவைச் சாத்தி தாழிட்டு விட்டு - ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் வந்து நின்றாள் இன்றைக்கு எதற்குள் நுழையலாம்...? சுடிதார்...? சல்வார் கம்மீஸ்...? “சுனிலுக்கு ஸாரிதான் பிடிக்கும். போன மாதம் எடுத்த அந்த வெளிர் மஞ்சள் நிற மைசூர் சஜ்ஜி சில்க் சேலையைக் கட்டிக்கொள்ளலாமா…? “சுவர் பீரோவைத் திறந்து - சேலை பெட்டி கோட், பிரா, ஜாக்கெட் என்று வரிசையாய் பொறுக்கிக் கொண்டு கண்ணாடி முன்பாக வந்து நின்றான். மார்புக்கு கட்டியிருந்த டவலின் முடிச்சை தளர்த்தி - பிராவை எடுத்து அணிய ஆரம்பித்தவளின் பார்வை ஏதேச்சையாய் கண்ணாடிக்குப் போனதும் - முகம் மாறினாள்.!

© 2024 Pocket Books (Ebook): 6610000530250

Release date

Ebook: 8 February 2024

Others also enjoyed ...