Step into an infinite world of stories
Fiction
ஒரு கவிதை என்பது எழுச்சி தருவது
ஒரு கவிதை என்பது மாற்றம் தருவது
ஒரு கவிதை என்பது சுகந்தம் தருவது
ஒரு கவிதை என்பது இதயத்தில் மயிலறகின் தடவல் தருவது
ஒரு கவிதை என்பது இயல்பு நிலையிருலிருந்து புதிய
புத்துணர்வின் மாற்றம் தருவது
ஒரு கவிதை என்பது விடியல் தருவது
ஒரு கவிதை என்பது உன்னைத் தட்டி
எழுப்பி உற்சாகம் தருவது…
ஒரு கவிதை என்பது உன்னிடம் உன்னையே தருவது…
எனக் கவிதை என்றால் என்னவென்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றாய் சொல்லி விட்டுப் போக கவிதை என்பது மலரின் சுகந்தத்தை காற்றில் பரவ விட்டுப் போவதைப் போல் என்பேன்.
இக்கவிதைகளை வாசித்து விட்டு எனக்கு கடும் விமர்சனம் தந்தாலும் இல்லையெனில் எனக்கு முதுகில் ஒரு தட்டு தந்தாலும் அல்லது எனக்கு சாமரம் வீசும் வாழ்த்து தந்திடினும் இல்லையெனில் தலை மீது வீங்குமளவிற்கு குட்டுக் கொடுத்தாலும் கண்டிப்பாக மிகக்கண்டிப்பாக மகிழ்வேன்.
Release date
Ebook: 12 April 2025
Tags
English
India