Step into an infinite world of stories
Religion & Spirituality
மதங்களில் தொன்மையானதான இந்துமதம் சநாதன தர்மத்தை குறிப்பதே, எந்த தனி மனிதனாலும் தோற்றுவிக்கப்படாத அம்மதம் தானாகவே உதித்து வளர்ந்த ‘அநாக’ என்ற பழமை கொண்டது. எனவே இந்துமத நூற்களையும், அது சம்பந்தப்பட்ட இதழ்கள் என இவைகளை படிக்கும் ஆர்வத்தையும், அவற்றில் நான் படித்து, ரசித்து உணர்ந்தவற்றை எழுதும்படி தூண்டியவர் என் துணைவர், ஓய்வு பெற்ற துணை கலெக்டரான திரு. ஆரூர்.ஆர். சுப்பிரமணியன் அவர்கள். அவர் ஒரு ஆன்மீக நூலாசிரியரும்கூட.
இந்துமத நூற்களில் காணப்படும் ஆன்மீக விஷயங்கள், நாளாக, நாளாக எனக்கு ஆனந்தத்தை ஊட்டுவதாக உணர்ந்து உணர்ந்துவிட்டதால், அவைகளை கற்கும் ஆர்வம், எழுதும் ஆர்வம் இன்றும் என்னைத் தொடர்கிறது. அதான் விளைவே, இந்த ஆன்மீகமே ஆனந்தம் [கேள்வி – பதில்] நூலாக மலர்ந்திருக்கிறது.
Release date
Ebook: 7 July 2023
English
India