Step into an infinite world of stories
Fiction
விமான விபத்தில் மனைவியையும், மகளையும் ஒரு சேரப் பறி கொடுத்து விட்ட, ஃபாரெஸ்ட் ஆபீஸர் ரவீந்தர், தனது பணியை ராஜினாமா செய்து விட்டு, தனது முதுமைக் காலத்தில் ஊட்டி பங்களாவில் தனியே வாழ்கிறார்.
இளம் வயதில் சிறந்த புகைப்படக் கலைஞராய் விளங்கி, பல போட்டிகளில் பரிசுகளை வெனற அவர், பொழுது போக்காய் தன் பழைய புகைப்பட ஆல்பத்தைப் பார்க்கிறார். அதில் வயலட் நிற கண்கள் படைத்த அந்த சிறுமியின் புகைப்படத்தையும் காண்கிறார். அது பல வருடங்களுக்கு முன் தனக்கு தேசிய அளவில் பரிசு பெற்று தந்த புகைப்படம் என்பதால் அதை பெருமிதத்தோடு பார்க்கிறார்.
அப்போது பத்து வயதாய் இருந்த சிறுமி இப்போது எப்படி இருப்பாள்?...அவள் கண்கள் எப்படியிருக்கும்?...என்பதைக் காண அவர் மனம் ஆசைப்படுகிறது.
அவளைக் காணப் புறப்படுகிறார். அவள் அந்த ஊரில் இல்லாதிருக்க, புது விலாசத்தைக் கண்டுபிடித்துச் செல்கிறார். அங்கு அவர் கண்ட அதிர்ச்சியான விஷயங்கள் அவரை உலுக்கியதோடு அவர் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்த, தன் முயற்சியை கை விடாமல், “அந்த வயலட் கண்களை பார்த்தே தீருவது?” என்கிற முனைப்போடு தொடர்ந்து செல்கிறார்.
அவர் அந்தக் கண்களைக் கண்டாரா?...இந்தக் கேள்விக்கான விடை, பரபரப்பான இந்த நாவலில், விறுவிறுப்போடு சொல்லப்பட்டுள்ளது. வாசியுங்கள்.
Release date
Ebook: 5 February 2020
English
India