Step into an infinite world of stories
Religion & Spirituality
இந்து மதம் வெறும் மதம் மட்டுமில்லை, ஒரு வாழ்க்கை முறை! அதில் அடங்கியுள்ள ஏராளமான ரகசியங்களை இன்றைய நவீன அறிவியல் ஆராய்ந்து வியக்கிறது. இப்படிப்பட்ட ரகசியங்களைத் தெளிவாக விளக்கும் நூல் இது!இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள தமிழ்நாட்டுக் காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநரும், தமிழறிஞருமான திரு. சு. ஸ்ரீபால் அவர்கள், “இதிலுள்ள இருபத்தேழு கட்டுரைகள் இருபத்தேழு நட்சத்திரங்களைப் போல ஜொலிக்கின்றன. ஒரு கட்டுரையைப் படித்தால் அது முன்பு படித்த கட்டுரையை விடச் சிறந்தது என்று எண்ணத் தோன்றுகிறது” எனப் பாராட்டியுள்ளார். கட்டுரைகளின் சில தலைப்புகள் இதோ:
நாமங்கள் ஆயிரம்! நலங்கள் பல்லாயிரம்!!, சப்த சக்தி என்ன செய்யும்?, பிரார்த்தனை என்ன தரும்?, எண்ண சக்தி என்ன செய்யும்?, காயத்ரி மந்திரம் பெண்களும் கூறலாம்!, உதவத் துடிக்கும் தேவதைகள், அமெரிக்க டாலரின் மர்மங்கள்!, ருத்ராக்ஷம் பெண்களும் அணியலாம்!, தீபமங்கள ஜோதி நமோ நம!, அஷ்டநிதிகளை அள்ளித் தரும் பத்மினி வித்யா!, அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!, ஆயுள் நீடிக்க ரத்தினங்களை அணிக!, மேலை நாட்டு விஞ்ஞானிகள் வியக்கும் தியான பலன்கள்!, ஆண்டுகள் அறுபது ஏன்?, குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் படிப்பதோடு மற்றவருக்குப் பரிசாகக் கொடுக்க உகந்த சிறந்த நூல் இது.
Release date
Ebook: 3 March 2023
English
India