Step into an infinite world of stories
Fantasy & SciFi
அதிசய பூமியில் ஆனந்தப் பயணம் இரு பகுதிகளைக் கொண்ட நூல். முதல் பகுதி ஆனந்தப் பயணம்!
அடுத்த பகுதி : அறிவியல் அதிசயங்கள்! இதைப் படித்த ஏராளமானோர் – பெரிய பிரபலங்கள் முதல் வழக்கமான வாசகர் வரை - இது உண்மையா என்று கேட்ட வண்ணம் இருந்தனர். அவர்களுக்கெல்லாம் இந்த நூலாசிரியரின் பதில் : இது கற்பனை தான் – ஆனால் உண்மை சம்பவங்களின் அடிப்படையிலான கற்பனை! யார் யாரெல்லாம் திபெத்திற்கு உயரிய சக்தியால் அழைக்கப்பட்டு சென்றார்களோ அவர்கள் எல்லாம் அற்புதமான ஆனந்தப் பயணத்தை மேற்கொண்டனர்; அதிசயமான அனுபவங்களைப் பெற்றனர். மேடம் ப்ளாவட்ஸ்கி உள்ளிட்ட ஏராளமானோரின் அனுபவங்களைப் படித்தால் இதை உணரலாம்.
அடுத்து ஒலி அலையால் லெவிடேஷன் எனப்படும் உயரே செல்லுதல் அல்லது மேல் எழும்புதல் இப்போது சாத்தியமாகி விட்டது. இதைப் பற்றிய கட்டுரையும் இந்த நூலில் காணலாம். பார்ப்பதெல்லாம் நிஜமல்ல உள்ளிட்ட பல அத்தியாயங்கள் பிரமிக்க வைக்கும் உண்மைகளைத் தெரிவிப்பவை.
இரண்டாம் பகுதியில் தாவரங்களின் அறிவு, மாற்று எரிபொருள் ஆராய்ச்சி, மூளை பற்றிய ஆராய்ச்சி பற்றிய முக்கிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மூளை ஆற்றலின் மேம்பாட்டிற்கு உதவும் கட்டுரைகள் 12 அத்தியாயங்களில் தரப்பட்டுள்ளது. மொத்தத்தில் இது ஒரு வித்தியாசமான நூல்!
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India