Step into an infinite world of stories
Non-Fiction
உலகில் இயற்கையாகவே அமைந்த பல பகுதிகள் வியப்பிற்குரியதாய் இருக்கின்றன. மனிதன் கலைத் திறனுடன் அமைத்த பல சின்னங்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்தும், தொடர்ந்து வியப்பிற்குரியதாக இருந்து வருகின்றன. நீருக்கடியிலும் பல வியப்பிற்குரிய அமைப்புகள் இருக்கின்றன. மனிதன் தனது தொழிற் திறனுடன் இயற்கையை மாற்றி அமைத்த சில கட்டுமானங்களும் வியப்பிற்குடையதாய் அமைந்திருக்கின்றன. நாம் ஏதாவது ஒன்றைப் பார்த்து அல்லது கேட்டு வியப்படைந்தால் அது நமக்கு அதிசயம்தான். இந்த அதிசயங்களெல்லாம் ஏழு என்கிற எண்ணிக்கையில்தான் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கால மாறுபாட்டில் பண்டைய ஏழு அதிசயங்கள், இடைக்கால ஏழு அதிசயங்கள், புதிய உலக அதிசயங்கள் என மாறுதல்களை அடைந்த போதிலும் ஏழு என்கிற எண்ணிக்கை மட்டும் தொடர்கிறது. இவைகளைப் போன்றே இயற்கை உலக அதிசயங்கள், நீருக்கடியிலான உலக அதிசயங்கள், தொழிற்திறன் உலக அதிசயங்கள் என்று அனைத்து அதிசயங்களும் ஏழு என்கிற எண்ணிக்கையிலேயே பட்டியலிடப்படுகின்றன.
தமிழில் ஏழுக்கு எப்போதும் ஒரு மதிப்பு உண்டு. ஏழு அகத்திணைகள், ஏழு இசைகள், ஏழு உலோகங்கள், ஏழு அளவைகள், ஏழு கடல்கள், ஏழு வள்ளல்கள் பெண்ணின் ஏழு பருவங்கள், ஏழு பிறப்புகள்.... என்று ஏழுக்குப் பெருமை சேர்க்கும் எத்தனையோ தகவல்களோடு ஏழு அதிசயங்களும் சேர்ந்து விடுகிறது. இந்நூலில் ஏழு அதிசயங்களுடன் உலகில் பார்க்க வேண்டிய பிற அதிசயங்களையும் சேர்த்துத் தங்கள் பார்வைக்கு நூலாக்கி வழங்கியிருக்கிறேன்.
Release date
Ebook: 5 January 2022
English
India