Step into an infinite world of stories
Non-Fiction
பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா? என்ற தலைப்புடன் வரும் இந்த நூலில் இந்துக்களின் அதிபயங்கர ஆயுதம் பற்றிய கட்டுரையுடன் வேறு பல விஷயங்களும் வருகின்றன. மஹாபாரதத்தில் உள்ள குழந்தை பிறப்பு சம்பந்தமான அதிசய மருத்துவ உண்மைகள், அதிநவீன டெக்னிக்குகள் மற்றும் நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு, தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்குத் தமிழர்கள் கையாண்ட உத்திகள், கடல் கடைந்து அமிர்தம் எடுத்த கதையிலும், தீபாவளி கொண்டாடுவதிலும் உள்ள விஞ்ஞான உண்மைகள் என்று பல்வேறு தலைப்புகளில் அதிசய விஷயங்கள் அடுக்கடுக்காக வருவதைக் காண்பீர்கள்.
ஒவ்வொரு காலத்திலும் சிலர், சில விஷயங்களை எழுதத் துவங்கியவுடன் மேலும் பலர் அதைத் துருவி ஆராய்கின்றனர் என்பது உண்மையே. இது எல்லாம் காலத்தின் கோலம். ரஜினிகாந்த் மூலம் ராகவேந்திர சுவாமிகள் பிரபலமானார்; எம்.ஜி.ஆர் மூலம் கொல்லூர் மூகாம்பிகை கோவில் பிரசித்தமானது. நடிகர் நம்பியார் மூலம் சபரி மலை ஐயப்பன் தமிழ்நாட்டில் பிரபலமானார் என்று மேம்போக்காகத் தெரிந்தாலும் எல்லாம் முன்னரே நிச்சயிக்கப்பட்ட விஷயமே. என் கட்டுரைகளையும் அதே நோக்கில் காண்க.
Release date
Ebook: 17 August 2022
English
India