Step into an infinite world of stories
Non-Fiction
இணையில்லா இந்து மதத்தில் ஒவ்வொரு மனிதனும் வாழ்வாங்கு வாழ அன்றாடம் கடைப்பிடிக்கக்கூடிய ஏராளமான அற்புதமான வழிகள் கூறப்பட்டுள்ளன. தினந்தோறும் இல்லத்தில் தீபத்தை ஏற்றி வழிபடுவது, தீபாவளித் திருநாள் உள்ளிட்ட திருவிழா நாட்களை உற்சாகத்துடன் கொண்டாடுவது, வானத்தில் உள்ள நட்சத்திரங்களை வழிபட்டு நமக்குத் தேவையான நலன்களை அடைவது, அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் வண்ணங்களை உரிய முறையில் பயன்படுத்தி ஏற்றம் பெறுவது என்று இப்படி ஏராளமான வழிமுறைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அடுத்து இந்து மதத்தில் அவ்வப்பொழுது ஆங்காங்கே தோன்றி அனைவருக்கும் வழிகாட்டுகின்ற மகான்களைப் பற்றி அறிந்து அவர்களை வணங்கினாலே தீமைகள் ஒழியும்; நல்லவை சேரும். ரமணர், வள்ளலார் உள்ளிட்ட சமீப காலத்தில் வாழ்ந்த மகான்களின் வரலாறை ஒவ்வொருவரும் அறிவது அவசியம் நமது இந்து மதத் தத்துவம், நடைமுறைகள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக அறிவியல் உரைகல்லில் உரசிப் பார்த்து அதிசயித்த அறிவியல் அறிஞர்கள் ஏராளமானோர். அவர்கள் செய்த அறிவியல் சோதனைகள் பற்றி ஆதாரபூர்வமாக விளக்கும் கட்டுரைகள் நமது நம்பிக்கையை வலுப்படுத்தி வளர்க்கும்.
மேலே கூறியுள்ள நடைமுறைகள், மகான்கள், அறிவியல் ஆமோதிக்கும் இந்து மத வழிமுறைகள் ஆகியவை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தீபம் ஏற்றுவதால் ஏற்படும் நல்ல பலன்கள், நட்சத்திர ரகசியங்கள், ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நலன்கள், வண்ணங்கள் வழங்கும் வளமான வாழ்க்கை!, இறைவன் இருக்கிறான் என்பதற்கான அறிவியல் தரும் ஆதாரங்கள், அதிசய மஹரிஷி பகவான் ரமணர், தமிழக சித்தர்கள் உள்ளிட்ட அபூர்வமான விவரங்களைக் கொண்டது இந்த நூல். அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய நூல் இது.
Release date
Ebook: 19 March 2025
English
India