Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
இளைய தலைமுறை இனிக்க இனிக்கப் படிக்கும் புதுக்கவிதை வடிவில் பெரியர் புராணம் என்றும் திருத்தொண்டத் தொகை என்றும் பெரியபுராணம் என்றும் தமிழ் மொழி என்றும் போற்றும் சிவ இலக்கியத்தை எழுதியுள்ளேன்.
சிற்பி இலக்கிய விருது உள்ளிட்ட 5 விருதுகள் பெற்ற இந்நூல் அன்றைய கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா கரங்களால் ஜெயந்தன் இலக்கிய விருதும் பெற்றது. 2010-ல் சிதம்பரத்தில் சேக்கிழார் நினைவு மண்டபத்தில் எமது குருநாதர். தவத்திரு. கோவை சிவப்பிரகாச சுவாமிகள் வெளியிட்டு அருளினார். அறுபத்து மூன்று பேரும் அறுபத்து மூன்று பாதைகளில் சிவன் சேவடிப் பேறு கொள்ள தத்தம் நெஞ்சுக்குள் நடத்திய உழவாரப் பணியாகவே, அறப்போராட்டமாகவே பெரியபுராணத்தை (4281 பாடல்கள்) வடித்த அருண்மொழித்தேவர் என்னும் சேக்கிழார் அன்றைய தமிழக முதலமைச்சர். அவர் சேமித்த காலத் தமிழ் சொத்து, தமிழர்களுக்கே உரியது. பாக்கியமும் உரிமையும் பக்தியும் கொண்டு சிவன்கழல் தொழுவோம். புஸ்தகா நிறுவனம் இந்நூலை மிகச்சிறப்பான முறையில் பதிப்பித்து சமூகப்பணி ஆற்றியுள்ளனர். அவர்களுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும்.
Release date
Ebook: 28 August 2023
English
India