Step into an infinite world of stories
Fiction
நம் பார்வைகள் படாமல், கவனங்கள் ஈர்க்க மாட்டாமல் இன்னும் கொஞ்சம் மனிதர்கள் சமூகத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்வதாகவும் சொல்ல முடியாது; செத்ததாகவும் சொல்ல முடியாது. கவலைக்குரிய, அவஸ்தைக்குரிய, கேலிக்குரிய வாழ்க்கை முறை அவர்களுடையது.
இந்தத் தொகுதி அந்தவித மனிதர்களின் வாழ்க்கையை அலசுகிறது. ஒரு மாடு மேய்ப்பவர், 'எருமட்டை' தட்டி விற்பவர், அடியாள், மீன் விற்பவள், தந்கைத்காக வாழ்வைத் தொலைக்கும் முதிர்க்கன்னி, இரவுக் காவலர், பிச்சைக்காரர், சாலையோர இட்லி கடைக்காரி, குப்பை சுத்தம் செய்பவர், தப்படிப்பவர், பேரீச்சம்பழ வியாபாரி - இப்படிப்பட்டவர்களே இச்சிறுகதைத் தொகுதியின் கதை மாந்தர்கள்.
இவர்கள் வாழ்க்கையில்தான் எத்தனை புயல், பூகம்பம், சுனாமிகள்....!
வாழ்க்கை என்பது வசந்தமாக அமைய வேண்டுமென எண்ணுகிறோம். எத்தனை பேர்களுக்கு அப்படி அமைகிறது?
சமூகத்தின் கடை மட்டத்தில் கிடந்துழலும் இவர்களை நான் தெரிந்து கொண்டது போலவே நீங்களும் தெரிந்து கொள்ளவே இம்முயற்சி.
மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கை எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்பதால் இந்தத் தொகுதியில் அடிமட்ட மக்களின் அபிலாஷைகளை சொல்ல முற்பட்டிருக்கிறேன்.
வித்தியாசமான தொகுதி மட்டுமன்று; விவரமான தொகுதியும் கூட.. சொல்லத் தவறியதை சுட்டிக்காட்டுவீர்.
என்றும் அன்புடன்
எம். கே. சுப்பிரமணியன்.
Release date
Ebook: 5 February 2020
English
India