Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
உள்ளத்து உணர்வின் வெளிப்பாடு கவிதை ஆகிறது. கவிதை மனதை மகிழ வைக்கவும், வலியை உணர வைக்கவும், கவிஞரின் மன எழுச்சியை வாசகருக்குக் கடத்தவும் கவிதை ஒரு ஊடு மொழியாகிறது. துறவரத்தின் இன்றைய நிலையைத் தோலுரிக்கிறது ஒரு கவிதை. எளிய கிராமத்தின் வெள்ளந்தித் தனம் மாறிப்போனதை வருத்தமுடன் சுட்டும் கவிதை 'கிராமம் கொந்தளிக்கிறது.' மருதநில வாசம் வீசும் கவிதைகள் வயலின் வயல்வெளியின் பசுமையைக் கவிதைகளில் சுமந்து மணம் பரப்புகிறது. தமிழ் அன்னைக்கு அணியாரம் சூட்டிய கம்பனைப் போற்றும் கவிதை உண்டு.
தாயவளின் பசியைக் காட்சிப்படுத்தும் கவிதையை வாசிக்கையில் மனம் கனக்கிறது. சிலப்பதிகாரத்தின் நீதியைக் காட்சிப்படுத்தும் கவிதை ஒன்று, "காலம் அது சிரித்தது" என முடியும். இந்நூலில் காதலின் சுவையை அள்ளித் தரும் கவிதைகள் பல உண்டு. வார்த்தைகளின் பெருக்கத்தைச் சுருக்கினால் இன்னும் சுவை கூடலாம். எளிய கவிதைகளைப் படித்தவுடன் புரிந்துகொண்டு, உணர்ந்து மகிழ வைக்கும் கவிதைகள் பல உண்டு. "இரவின் கதறல்" என்ற கவிதை சஞ்சல மனதின் பாவ மன்னிப்பாய் வலியைக் கடத்துகிறது.
Release date
Ebook: 7 September 2023
English
India