Step into an infinite world of stories
Religion & Spirituality
கடவுள் இருக்கிறாரா? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? பிரார்த்தனைக்குப் பலன் உண்டா? கர்ம பலன் என்றால் என்ன? - இப்படி மனித வாழ்க்கையில் பல சிக்கலான கேள்விகள் எழுகின்றன. இந்த நவீன யுகத்தில் கடவுளை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. விஞ்ஞானிகளில் சிலர் புதிய நாத்திகவாதத்தை அறிவியல் துணையோடு மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர்.
அதே சமயம் விஞ்ஞானிகளில் பலரும் அதே அறிவியலின் துணையோடு கடவுளை ஆய்வுக்கு உட்படுத்தி இறைவன் இருப்பதை உறுதிப்படுத்துகின்றனர். இந்த விஞ்ஞானிகள் தரும் செய்திகளை இந்த நூலில் காணலாம். கடவுளைக் காட்டு என்போருக்கு பதிலை பல எடுத்துக்காட்டுகளுடன் தருவதோடு இறைவன் பற்றிய சுவையான பல உண்மைகளையும் தொகுத்துத் தருகிறது இந்த நூல். கர்ம பலனைப் பற்றிய கேள்விகளுக்கு விடைகளையும், பிரார்த்தனையின் மகிமை பற்றிய செய்திகளையும் கூடவே இதில் படித்து மகிழலாம். கேள்வி கேட்கும் மற்றவருக்கும் தக்க விடைகளைக் கூறலாம்.
Release date
Ebook: 2 February 2023
English
India