Step into an infinite world of stories
1 of 46
Non-Fiction
இதோ எனது நான்காம் பதிப்பான 'மகேந்திரனின் கதையும் கட்டுரையும்' உங்கள் கைகளில்... இதில் என்ன சிறப்பு? என்றால், சிறப்பென்று ஒன்றுமில்லை. என்னுடைய மருத்துவத் தொழிலில் நான் பார்த்த... என்னைப் பாதித்த சில நிகழ்வுகளை முடிந்த அளவிற்கு உண்மை மாறாமல் எழுத முயன்றிருக்கிறேன். இதில் நமக்கான செய்திகளும் இருக்கிறது. சில கட்டுரையில் கோபமும், சிலதில் ஏக்கங்களும், சிலதில் சமூகத்தின் தாக்கங்களும், குழப்பங்களும், அனுபவங்களும் கலவையாய் இருக்கும். சில சமயம் தடுமாறி நின்றுவிடுவேன். பல சமயம் எரிமலையாய் வெடிப்பேன். சிலதில் உருகிடுவேன். சிலதில் அறிவுரைகளும் புத்திமதிகளை வாரிவாரி வழங்கி இருப்பேன். பெருபாலான கட்டுரைகளில் தலைமுறை இடைவெளியும், மரணமும் இடம் பெற்றிருக்கும். யாரையும் புண் படுத்துவதோ இல்லை கிண்டல் அடிப்பதோ என் நோக்கமில்லை. எனக்குத் தெரிந்ததை, என்னை பாதித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்வதுதான் என் நோக்கம். என் ஆசை. நானும் உங்களில் ஒருவன்தானே. நான் என்ன வேறு கிரகத்தில் இருந்தா வந்து விட்டேன்?. உங்கள் அனுபவம்தான். என் அனுபவமும். என்ன? நான் வெளிப்படையாக எழுதுகிறேன். நீங்கள் மனதிற்குள் வைத்து இருக்கிறீர்கள். அவ்வளவுதான் வித்தியாசம். என் நடை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?. படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் என்னை செதுக்கி கொள்ள..என்னை திருத்திக்கொள்ள ஏதுவாய் இருக்கும். கட்டுரைக்குள் போகலாமா...?
Release date
Ebook: 28 August 2025
English
India