Step into an infinite world of stories
Fiction
இன்றைக்குத் தமிழகத்தில் எரியும் பிரச்சனையாகத் தொடரும் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்முறை என்கிற முக்கியமான பிரச்சனையான மையக்கருவாகக் கையிலெடுத்து அதன் பின்னணியில் சஸ்பென்ஸ் வைத்து நல்ல திருப்பங்களுடனும், அவசியமான சமூகக் கருத்துக்களுடனும் இந்தத் தொடரை அமைத்திருக்கிறார். நான் வெகுவாக ரசித்த சில வாக்கியங்கள்; அவள் காரின் சீட்டில் அமர்ந்து சீட்-பெல்ட்டுக்கு ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பைக் கொடுத்தாள். அவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்கள் வாயிலிருந்த ஸ்ட்ராவுக்குக்கூட கேட்டிருக்காது. கதவு ஒரு கோடு அளவிற்குத் திறந்தது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு அரசின் உதவி மையங்களை எப்படி 1098 எண் மூலம் அணுக வேண்டும் என்கிற அத்தியாவசியமான தகவலும் கதையில் வருகிறது. இந்தக் கதையில் இடம்பெறும் சில சம்பவங்களின் உண்மைத்தன்மைக்காக நிறைய படித்திருக்கிறார் என்பதை உணரமுடிகிறது.
Release date
Ebook: 7 July 2023
English
India