Complex! Devibala
Step into an infinite world of stories
நான் எழுந்திருக்க முயன்ற அதேகணம், "அம்மாஆஆ ..." என்றொரு கூக்குரலுடன் ஓர் உருவம் என் மீது சாய்ந்தது.
தாங்கிப் பிடித்தேன். கையில் பிசுபிசுவென்று ஏதோ ஒட்டியது. ரத்தமா? அந்த உருவத்தை மெல்ல படுக்க வைத்தேன். மெல்லக் கையை கீழே இறக்கிக் கொண்டுவர, கை எதிலோ இடித்தது. பிடித்து இழுத்தேன். அது ஒரு கத்தி என்பதை உடனே உணர முடிந்தது. கீழே போட்டுவிட்டு உடல் நடுங்க எழுந்து நின்றேன். பக்கத்து அறையில் அவள், இங்கே இவன்... நள்ளிரவில் இரண்டு படுகொலைகள்... இதற்கு ஐவிட்னஸ் 'ஐ'யே இல்லாத நான். கடவுளே... இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? சில செகண்டுகள் யோசித்தேன். "முட்டாள்... உடனே... உடனே இந்த இடத்தை விட்டு விலகு ஓடு..." என்றது மூளை.
Release date
Ebook: 19 December 2022
English
India
