Step into an infinite world of stories
Fiction
புனிதமான பாரத தேசத்தில் ஒரு அற்புதமான காலத்தைப் பற்றிய சரித்திரம் இது. அயோத்தியில் ஶ்ரீ ராமருக்கு ஒரே நாளில் கோவில் கட்டிய மாமன்னன் யசோவர்மன் ஆவான். இன்று உத்தரப் பிரதேசத்தில் கன்னோஜ் என்று அழைக்கப்படும் நகரம் பழைய காலத்தில் கன்யாகுப்ஜம் என்று அழைக்கப்பட்டு புகழ் பெற்ற பெரும் தலைநகரமாக விளங்கியது. யசோவர்மனின் மகனான அமா ராஜன் இளமையில் ஒன்றும் அறியாத ஊதாரியாகத் திரிந்தவன். ஒரு நாகத்தில் அருளினால் அவன் பெரும் வீரனாகி அனைத்துக் கலைகளையும் கற்றான். வியத்தக்க வகையில் தந்தையின் புகழுக்குப் புகழ் சேர்த்தான். இந்த அபூர்வமான நாகம் பற்றிய செய்திகள் உண்மையே.
கன்யாகுப்ஜம், உஜ்ஜயினி உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆலயங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை பற்றிக் கேள்விப்பட்ட முகம்மது இபின் காசிம் பெரும் படையுடன் உஜ்ஜயினி நோக்கி வந்தான். அவனை எதிர் கொண்டு, தோற்கடித்து விரட்டி அடித்தவன் யசோவர்மன். எதிர்பாராத விதமாக அமா ராஜன் தந்தைக்கு உதவி செய்து வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்றினான். இதில் உள்ள பெரும்பாலான பாத்திரங்கள் உண்மையில் வாழ்ந்தவர்கள்; சம்பவங்கள் உண்மையில் நடந்தவை. நாகநங்கை என்ற ஒரு பாத்திரமே இதில் கற்பனைப் படைப்பு.
2024 ஜனவரியில் அயோத்தியில் ராமருக்குக் கோவில் புதுப்பிக்கப்பட்டு ராமர் தனது இடத்தில் நிறுவப்பட்ட அருமையான கால கட்டத்தில் இந்த நாவல் இரண்டாம் பதிப்பாக வருவது குறிப்பிடத் தகுந்த ஒரு சிறப்பான விஷயம். அனைத்து இந்தியர்களின் பெருமைக்கான இந்த நாவலை அனைவரும் படிப்பதோடு மற்றவர்களுக்கும் பரிசாகத் தரலாம்.
Release date
Ebook: 28 March 2025
English
India