Step into an infinite world of stories
Fiction
எழுதி, எழுதி பண்பட்டு துலங்குகிறவர்கள் பலர். இவரோ, எழுதுகிறபோதே பிரகாசம் காட்டியவர். ஆனால், மின்னி மறையும் வீழ் நட்சத்திரமல்ல. விடாது ஜொலிக்கிற விடிவெள்ளி.
தமிழில் இன்று வெளிவருகிற அனைத்து முன்னணி வார, மாத இதழ்களிலும் இவரது கதை இடம் பெறுகிறது. குறுகிய காலத்தில் இமாலய வளர்ச்சி. காரணம் அதிர்ஷ்டம் அல்ல. உண்மை; உழைப்பு; ஒப்பிட முடியாத எழுத்து.
இந்த, ‘இவரின்’ பெயர் என். சி. மோகன்தாஸ். நண்பர் மோகன்தாசுக்கு உள்ளே பல பரிமாணங்கள் உண்டு. இளையவர்; இனியவர்; கவிஞர்; கலைஞர்.
மென்மை இவரின் தன்மை. இது இவரது எழுத்திலும் எதிரொலிக்கும். பகட்டு காட்டி பிரமிக்க வைக்கும் படாடோப எழுத்து அல்ல இவருடையது. மனசை வருடுகிற மயிற்பீலி எழுத்து.
வண்ணத்தமிழுக்கு வளம் சேர்க்கும் என். சி. மோகன்தாசை போற்றுகிறேன்!
சத்தமில்லாது சரித்திரம் படைக்கும் அவரது சாதனையை வாழ்த்துகிறேன்!
அன்புடன்,
அந்துமணி
Release date
Ebook: 2 June 2020
English
India