Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
"பண்டைய காலம்" எனும் தலைப்பில் தொடங்கி "தலைமுறை தாங்கும் தாய், தாதை" என முடியும் வரையிலான கவிதைகள் யாவும் அருமை. சுருங்கக்கூறி விசாலப் பார்வையாக விரிய வைக்கும் கவிஞரின் சொற்களில் கவிதைகள் பூத்துக் குலுங்குகின்றன. கவிமாலையில் எதனை கோர்ப்பது? எதனை விடுவது? "முன்னவன் இறைவன் பின்னவன் பகைவன்" எனும் தலைப்பிலான கவிதை, கூடும் நட்பு கூடா நட்பின் தன்மையை எடுத்துக்காட்டுவது திருமூலர் அருளிய திருமந்திரப் பாணியை காட்டுவதாக அமைந்துள்ளது. "கலியுகம் பிறந்ததென்ன!" என்ற தலைப்பிலான கலியுகத்தை நினைத்து கேள்விக்கேட்பது கவிஞரின் சமுதாயத்தின் மீதான உள்ளக்கிடக்கையை காட்டுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சில சோறுகள் பதம் போல, ஒரு சிலவற்றினை மட்டுமே நாம் சுட்டியிருக்கிறோம். படிக்கப் படிக்க சிந்திக்கவும், மனம் மகிழ வைக்கவும் இக்கவிதை தொகுப்பில் பல உள்ளன.
Release date
Ebook: 15 December 2023
English
India