Step into an infinite world of stories
Fiction
இக்கதைகள், ஏறக்குறைய பதினைந்து வருடக் கனவுகள்; கடிவாளம் மறுத்த ஆரம்ப சீற்றங்கள்; வத்தியின் இரு நுனிகளும் பற்றியெரியும் அக்னி கோபங்கள்; ஜ்வாலை முகங்கள்; ஆசைக் கனவுகள்; தீய்ந்த கருகல்கள்; பச்சை மரம் வடித்த ரத்தங்கள்; பட்டமரத்தில் வடிந்த பால்கள்; உயிரோடு புதைத்துவிட்ட உயிர்கள்; சமாதிமேல் நட்ட செடிகள்; புதைத்த உயிர் வீசும் பூமணங்கள் – அடுக்க அடுக்க ஓயவில்லை, அலுக்கவில்லை; இது திரௌபதியின் துகில். இடுப்புச் சீலையைப் பிடித்த கை உயரத் தூக்கி விட்டபின் வர்ண வர்ணமாய் வானம்வரை குவிந்து காக்கப்பட்ட மானம் - என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் நினைத்துக் கொண்டதுதான் என்று இப்போது தெரிகிறது.
ஏனெனில்
யாவும் நீத்த பின் காக்க என்ன இருக்கிறது? பிறகு காப்போன் யார்?
யாராயிருப்பினும் காக்கும் நோக்கம் என்ன?
எல்லாமே கனவு. கனவு காட்டலின் களவு காட்டல். பச்சைக் கனவின் பச்சைக் களவு. பச்சைக் கனவுதான். பச்சைப்புளுகு அல்ல. கனவுகள் புளுகுகள் அல்ல. கனவுகள் உண்மையின் நிழல்கள். காலையின் பொன் வெய்யில் முன் தோற்றும் நிழல். மண்டை பிளக்கும் உச்சி வெய்யிலிலும் விடாது காலடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் துணை நிழல். மாலையின் மஞ்சளில் பின் சாய்ந்த குடை நிழல்.
இப்பக்கங்களுக்கிடையில் நிகழும் நிழல்கள், நீயும் நானும் நாமும் புகுந்த கனவுகள்.
இன்றில்லையெனில் நாளை. நாளையில்லையெனில் என்றோ ஒரு நாள். கண்டுகொள்ளும் கனவுகள். அதைப்பற்றி எனக்குத் துளிக்கூடச் சந்தேகமில்லை.
நான் களவு காட்டும் முகம். யார் முகம் கண்டுகொண்டு விட்டேன். உனக்குத் தெரியவில்லை? இன்னும் தெரிய வில்லை?? தெரியாவிட்டாலும் பரவாயில்லை? தெரியும் வரை கனவு காண்பாய்; தெரிந்த பின் களவு காண்பாய்.
கனவுகாட்டும் களவின் உளவுமுகம் கண்டுகொண்டதும், நீயும் ஆனந்தக் கூத்தனாகிவிடுவாய்.
பிறகு யாரைப்பற்றி உனக்கென்ன?
Release date
Ebook: 17 May 2021
English
India