Step into an infinite world of stories
Fiction
பரிபாடல் என்னும் இந்த தொகை நூலில் 1, 2, 3, 4, 13, 15 பாடல்கள் எட்டும் திருமாலைப் பற்றி பாடப்பட்டுள்ளது. செவ்வேளைப் பற்றி 5, 8, 9, 14, 17, 18, 19, 21 ஆகிய 8 பாடல்கள் பாடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 9 பாடல்களும் வையை நதியைப் பற்றி பாடப்பட்டிருக்கின்றது. கடைச் சங்க காலத்தை ஒட்டிய காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
மற்ற சங்க நூல்களைப் போல இல்லாமல் பரிபாடலில் வடமொழி புராண கதைகள் வழிபாட்டு மரபுகள் போன்றவை மிகுதியாக காணப்படுகிறது.
இது தமிழர்களுக்கும் வடமொழியைச் சேர்ந்தவர்களுக்கும் உள்ள தொடர்பு பல ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை காட்டும் விதமாக உள்ளது. தமிழகத்தில் பிற்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்களுக்கு பரிபாடலை முன்னோடியாகவும் கூறலாம். இந்த நூல் தமிழர்களின் இசைத் திறத்தை பறைசாற்றும் விதமாக அமைந்த நூலாகும்.
இந்த நூலில் உள்ள பன்னிரு பாடல்களும் பாலை யாழ் என்னும் வகையைச் சேர்ந்தது. தொடர்ந்து வரும் 5 பாடல்களும் நோதிரம் என்னும் பண் வகையிலும் இறுதியாக வரக்கூடிய நான்கு பாடல்களும் காந்தாரம் என்னும் பண் வகையையும் சேர்ந்தது.
இறுதிப் பாடலில் பண் தெரியவில்லை. ஆயினும் இதுவும் காந்தாரம் என்னும் பண் வகைக்குக்கு உரியது என்றும் கூறுவர். இதுபோன்ற முத்தமிழும் மணக்கும் இந்த பரிபாடலில் படிப்பவர்கள் இலக்கிய இன்பம் பெறுவார்கள் என்பது திண்ணம்.
Release date
Ebook: 12 August 2021
English
India