Step into an infinite world of stories
Fiction
கதாநாயகன் பேசும் பஞ்ச் டயலாக்குகளை ஒரு குறும்புக்கார இளைஞன் தயாரித்து தருவதை சிரிக்க சிரிக்க சொல்கிறது -'பஞ்ச் டயலாக் தொழிற்சாலை'.பெட்ரோல் செலவுக்கு ஒரு குடும்பத்தலைவன் வீட்டை அடமானம் வைத்து வங்கி கடன் வாங்குவதை கிண்டலிக்கிறது 'பெட்ரோல் லோன்'.அரசியல்வாதிகளுக்கு அல்லக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதனை போதிக்கிறது 'யானையின் ஒரு கவளம்'.பள்ளித்தோழி இரட்டைச் சடை ஜெயந்தியை பார்க்க போகும் அம்மா மகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி என்ன? 'இரட்டை சடை ஜெயந்தி' படித்து தெரிந்து கொள்ளுங்கள். அபார்ட்மென்ட்களில் காவலாளிகள் பணியமர்த்தப்படும் விதத்தை ஈரத்தோடு கூறுகிறது 'காவலாளி'. சின்னத்திரை பரிசளிப்பு கூப்பன்கள் படும் பாட்டை மணக்க மணக்க கூறுகிறது 'கலாஸ் ஆப்பக்கடை'. மொத்தத்தில் 25 சிறுகதைகளும் ஒரு வாசிப்பு விருந்து. ஹாஹா பஞ்ச் டயலாக் தொழிற்சாலை ஹாஹா.
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India