Step into an infinite world of stories
ரஞ்சினி - ராமச்சந்திரன் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெறுகிறது. தன் வருங்காலக் கணவனின் அழகை, அந்தஸ்தை அறிந்து தான் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி என்று பெருமைப்பட்டுக் கொள்கிறாள் ரஞ்சனி. ராமச்சந்திரனுக்கு - ஏற்கனவே திருமணமாகி ஏதோ காரணத்தால் விவாகரத்து பெற்றவன் என்கிற உண்மை தெரிய வருகிறபோது இரண்டாந்தாரமாக இருக்க விரும்பாத ரஞ்சனி ராமச்சந்திரனை மணந்து கொள்ள மறுத்து விடுகிறாள். தாய் தந்தை, சமாதானத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மனம் வெறுத்து வேலைக்குச் செல்ல நினைத்து வேலைக்கு விண்ணப்பித்து வேலையில் சேரும் போது தான் மறுத்த ராமச்சந்திரனே தனது மேலதிகரியாகக் காண்கிறாள்.
அதே அலுவலகத்தில் வேலை செய்யும் கௌசிக்கை ரஞ்சனி விரும்ப, கெளசிக்கும் ரஞ்சனியை விரும்புகிறான். அவர்கள் திருமணம் நடைபெற ராமச்சந்திரனும் பெரிதும் உதவுகிறான். ஆனால் அதன் பின் நடப்பது... நினைத்தே பார்க்க முடியாத நிகழ்ச்சிகள். ஒரு குடும்பக் கதையைக் கூட இவ்வளவு திருப்பங்களுடன் சுவையாக எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜனால் மட்டும்தான் எழுத முடியும் என்பது மீண்டும் உறுதியாகிறது. சிறிய நாவல் என்றாலும் சிந்திக்க வைக்கும் நாவல். ஆண்களின் நல்ல மனத்தைப் பார்க்காமல் இரண்டாம்தாரம் என்ற ஒன்றை மட்டும் வைத்து திருமணத்திற்கு மறுத்து விடும் பெண்களுக்கு இந்நாவல் ஒரு நல்ல படிப்பினை. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
Release date
Ebook: 3 January 2020
English
India