Step into an infinite world of stories
Fiction
சிறுகதை என்பது சிறியதாக இருக்க வேண்டும். இந்த நூலில் உள்ள கதைகள் பதினைந்தும் அளவில் சிறியன; பயனில் பெரியன. முதல் கதை “மாண்புமிகு மனிதர்”. “மாண்புமிகு” என்னும் அடைமொழியே அதற்குரிய தகுதியை, தரத்தை இழந்துவிட்டதோ என்று ஐயுறுகிற காலம் இது.
குடியரசுத்தலைவர் அப்துல்கலாம். அவர்களைப்பற்றிய இக்கதையில் “எனக்குப் பிடித்த மனிதர்” என்னும் தலைப்பில் பேசும் மாணவன். “கதவைத்திற காற்று வரட்டும்” என்று சான்றோர் அரிய நூல் எழுதியுள்ளார். இந்தத் தலைப்பையே “திறந்த ஜன்னல்கள்” என்னும் சிறுகதைக்குத் தரலாம்.
“தண்ணீரைத் தேடி” என்று ஒரு சிறந்த கதை. தலைப்பைப் பார்த்ததும் மனிதர் தண்ணீரைத் தேடி அலைவதைப் பற்றியதோ? என்று தோன்றும். ஆனால், இது முற்றிலும் மாறானது. நமக்குத் தெரிந்ததைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பது மற்றொரு வகை. இந்த வகையை நமக்குக் கற்றுத்தருகிறது, “விட்டாச்சு லீவு.”
காலத்தோடு பொருந்திய தேவியின் மற்றொரு அற்புதக் கதை “சுனாமிப் புத்தாண்டு.” கொடுப்பதை நாமே நேரடியாய்க் கொடுப்பதன் அவசியம் இதில் தெரிகிறது; அதன் ஆனந்தம் புரிகிறது.
இப்படிப் பதினைந்து கதைகளும் பயன் தருகிற கதைகளாக உள்ளன. இவை சாதனைக் கதைகள். தேவியின் சாதனை சிறுவர்கள் செய்யும் சாதனை கூறும் கதைகள். கதைகளின் எளிய நடையும் நம்மோடு பேசுகிற பாணியும் நமக்குக் கதை சொல்கிற பாணியும் மென்மேலும் சிறப்பளிப்பவை என்பதை வாருங்கள் படித்து தெரிந்துகொள்வோம்.
Release date
Ebook: 9 July 2025
English
India