Step into an infinite world of stories
Religion & Spirituality
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ‘ராம’ என்ற இரண்டு எழுத்தினால்”
என்பது கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாக்கு. ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’ என்று நம்மாழ்வார் கூறி அருளிய ஒரு கருத்தே போதும் நாம் எதைக் கற்க வேண்டும் என்பதை அறிய!
வால்மீகி ராமாயணத்தோடு கம்ப ராமாயணம் துளஸி ராமாயணம் ஆகிய மூவரின் ராமாயணத்தை ஒப்பிட்டு உயர் கருத்துக்களை நல்குவதோடு மட்டுமின்றி இராமாயண வெண்பா, வீரபத்திர ராமாயணக் கும்மி, நலுங்கு மெட்டு ராமாயணம், ராமாயண அம்மானை உள்ளிட்ட பல இராமாயண இசை, நாடக நூல்களையும் நன்கு பயின்றுள்ள நூலாசிரியர் இராமாயணம் பற்றி ஆழ்ந்து படித்துள்ள சிறந்த அறிஞர்களின் கருத்துக்களையும் ஆங்காங்கே தமது கட்டுரைகளில் தந்துள்ளார்.
பால காண்டத்தின் முக்கிய நிகழ்வுகளான விஸ்வாமித்திரரின் வருகை, தாடகை வதம், அகலிகை சாப விமோசனம், சீதா கல்யாணம் ஆகியவற்றில் உள்ள இரகசியங்களையும் மர்மங்களையும் சுவைபட விளக்குகிறார். இந்த நூல் குடும்பத்தினர் அனைவரும் படிப்பதற்கு ஏற்றது. நண்பர்களுக்கும் இளம் வயதினருக்கும் பரிசாகக் கொடுக்க ஏற்ற நூல் இது.
Release date
Ebook: 7 July 2023
English
India