Step into an infinite world of stories
Language
சம்ஸ்கிருத இலக்கியம் ஒரு பெரும் கடல். பெரும் பாண்டித்யம் இல்லாமல் அதில் நான் புகுந்து சம்ஸ்கிருத செல்வத்தைப் பகிர்ந்து கொள்வது கம்பனுடைய சொற்களால் ‘ஆசை பற்றி அறையலுற்ற’ கதை தான். ‘அறையும் ஆடரங்கும் மடப்பிள்ளை தரையினில் கீறிடில் தச்சரும் காய்வரோ’ (வீட்டின் வரைபடத்தையும் ஆடிட்டோரியத்தின் டிசைனையும் சிறு குழந்தை தரையில் கிறுக்கினால் அதைப் பார்த்து அந்தக் குழந்தையின் தந்தையான சிற்பி கோபப்படுவானா, என்ன! அடடா, நம் குழந்தை பிறவி மேதை; இப்பொழுதே என்னை விட அழகாக டிசைன் செய்யும் பெரிய ஆர்கிடெக்ட் ஆகி விட்டானே என்றல்லவா புகழ்வான்!) என்று கம்பன் கூறிய பாடலை நினைவில் கொண்டவுடன் தைரியம் வந்து தமிழ் மக்களின் முன் இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்.
சம்ஸ்கிருதமும் தமிழும் அழகிய, தொன்மை வாய்ந்த, அபூர்வமான, இலக்கண, இலக்கியம் கொண்ட, உலகின் பேரறிஞர்கள் கண்டு வியந்த, இன்றும் வியக்கும் மொழிகள். இதற்கான காரணம், இந்த இரண்டு மொழிகளும் சிவ பிரானால் உருவாக்கப்பட்டவை, கந்தனால் வளர்க்கப்பட்டவை என்பதே!
Release date
Ebook: 10 June 2022
Tags
English
India