Step into an infinite world of stories
Non-Fiction
ஹிந்து பாரம்பரியத்தில் சக்தி வழிபாடு தனி இடத்தைப் பெறுகிறது. சக்தி வழிபாட்டிற்கென பாரதமெங்கும் குமரி முதல் இமயம் வரை தலங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான சில சக்தி ஸ்தலங்களைப் பற்றி இந்த நூல் விவரிக்கிறது. திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன், குழந்தை வரம் தரும் திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை, இல்லறப் பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி, வெற்றி அருளும் கொல்லூர் மூகாம்பிகை, கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஶ்ரீ சாரதாம்பிகை, தீராத வியாதி தீர்க்கும் சோட்டாணிக்கரை பகவதி அம்மன், மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி விசாலாக்ஷி, வியாதிகள் தீர்த்து, குடும்ப நலம் ஓங்கச் செய்யும் விந்த்யாசலவாஸினீ, பற்றிய விவரங்களை இந்த நூலில் காணலாம். அத்தோடு 108 சக்தி பீடங்கள் பற்றிய பட்டியலையும் தேவி பாகவதம் குறிக்கும் தேவியின் ஸ்தானங்களையும் இந்த நூல் குறிப்பிடுகிறது. அனைத்து நலனையும் பெற தேவி வழிபாடு சிறந்தது என்பதால் இந்த தலங்களைப் பற்றி அறிந்து கொள்வது வளமான வாழ்க்கையை நோக்கி எடுத்து வைக்கும் முதல் படியாக அமையும். அனைவரும் படிப்பதோடு மற்றவருக்குப் பரிசாகவும் அளிக்க உகந்த நூல் இது.
Release date
Ebook: 19 March 2025
English
India