Step into an infinite world of stories
Non-Fiction
“உலகில் தோன்றிய எல்லா மொழிகளிலும் பாரத தேச மொழியான சம்ஸ்கிருதம் மிக இனிமையானது. சிறப்பானது.தெய்வீகமானது. அதில் உள்ள காவியங்கள் இனிமையானவை. அதை விட இனிமையானவை அதில் உள்ள சுபாஷிதங்கள்” என்று சுபாஷிதத்தின் சிறப்பைக் கூறும் ஸ்லோகம் ஒன்று உண்டு. இந்த சுபாஷிதங்களைத் தொகுத்து தமிழ் அர்த்தத்துடன் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சம்ஸ்கிருதச் செல்வம் முதல் பாகம், சம்ஸ்கிருதச் செல்வம் இரண்டாம் பாகம் (132 நியாயங்கள் அடங்கிய தொகுப்பு), 12288 காதல் வகைகளில் இலக்கியம் தரும் சில காட்சிகள், ஸம்ஸ்கிருத சுபாஷிதம் 200, சம்ஸ்கிருத இலக்கியத்தில் சில புதிர்க்கவிதைகளும் அறிவுரைகளும், வாழ்க்கை நெறி கூறும் சுபாஷிதங்கள் ஆகிய நூல்களில் அற்புதமான சுபாஷித ஸ்லோகங்களைத் தொகுத்து வழங்க முடிந்தது. என்றாலும் கூட பல்லாயிரக்கணக்கான சுபாஷிதங்கள் அடங்கிய சம்ஸ்கிருத பாற்கடலில் சில நூறு சுபாஷிதங்களே இவற்றில் தரப்பட்டுள்ளன. இந்த வகையில் இப்போது மலர்வது சுவையான சம்ஸ்கிருத சுபாஷிதங்கள் என்ற இந்த நூல்.
இதில் அயல் தேச சொத்து, ஆசார்யர், தந்தை, தாய், சகோதரன், சகோதரி பெருமை!, விதி குறி வைத்து விட்டால் விடாது!, தயையின் மஹிமை!, விதியை வெல்ல முடியாது என்றாலும் முயற்சியும் தேவையே!, வாழ்க்கையே வாழ்க்கையின் சாரம்!, நிறைகுடம் தளும்பாது!, பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் மகிழ்ச்சி தரும் தேவி!, மோக்ஷ வாயில் காப்பாளர்கள் நால்வர் யார்? பெண் அக்னி போல; ஆண் குடத்து நெய் போல!, அஹிம்சையே உயர்ந்த தர்மம் உள்ளிட்ட அத்தியாயங்களில் சுவை மிகுந்த சுபாஷித ஸ்லோகங்களையும் அதன் தமிழ் அர்த்தத்தையும் காணலாம். வாழ்க்கை நெடுகப் பயன்படுத்தக் கூடியவையே சுபாஷிதங்கள். இந்த நூலைப் படிக்கலாம்; பகிர்ந்து கொள்ளலாம்; பரிசாகவும் வழங்கலாம்
Release date
Ebook: 19 March 2025
English
India