Step into an infinite world of stories
Fiction
போட்டி மிகுந்த இந்த உலகில் வாழ்க்கையில் துடிப்புடன் நல்ல முறையில் முன்னேற வழிகாட்டும் உத்திகள் ஏராளம். வெற்றி அடைவதற்கான உத்திகளைக் கூறும் நூல் இது!
ராபர்ட் க்ரீன் எழுதிய சக்தி பெற 48 விதிகள் வெற்றி பெறுவதற்கான நவீன உத்திகளைக் கூறும் ஒரு புத்தகம். . இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகமும் சில விதிகளைப் பற்றியும் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. இது காட்டுவது வெற்றிக்கான புதிய உத்திகள். நமது அறம் சார்ந்த அறிவுரைகளும், வெற்றி உத்திகளும் கூட கதைகள், கட்டுரைகள் வாயிலாக இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. இவை என்றும் நிலைத்திருக்கும், அறம் சார்ந்த வெற்றிக்கான, பழைய உத்திகள்! ஆக பழையதும் புதியதுமான வெற்றி உத்திகளைச் சுட்டிக் காட்டி விளக்கும் புத்தகம் இது.
இதன் ஜீவநாடியாக அமைவது ‘தாளம் தப்பாமல் பாத்துக்கோ’ என்ற கட்டுரை! நூலில் உள்ள சில அத்தியாயங்கள் மற்றவரை உனக்காக வேலை செய்ய விடு! புகழை உனக்கு வரச் செய்! சரணாகதி உத்தியைக் கையாள் : பலவீனத்தைச் சக்தியாக மாற்று! எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் - அடுத்தவரை பலி கொடுத்தாவது! செயலில் இறங்கும்போது துணிவுடன் இறங்கு சக்தி பெற 48 விதிகள் : ராபர்ட் க்ரீன் எழுதியுள்ள நூல்! ஒரு அறிமுகம்! மர்பி விதி ஔவையார் லா! (Law) வள்ளுவர் ரூல்!!(Rule) பாரதியார் ஃபார்முலா!!! (Formula)
ரஷிய சூத்திரங்கள்!
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India