Step into an infinite world of stories
Non-Fiction
தமிழ் திரைப்படப் பாடல்களுக்கு என்று சுவையான ஒரு தனி சரித்திரம் உண்டு. பாடல்கள் பல விதம். லட்சக்கணக்கான ரசிகர்கள் கேட்டு ரசித்தவை அவை. இன்றும் என்றும் காலத்தால் அழியாத பாடல்கள் ஏராளம் உண்டு. அவற்றில் ரசிகர்களை ஈர்த்த பாடல்களின் சரித்திரத்தையும், இசை அமைப்பாளர்கள் பற்றியும், பாடல்களை இயற்றிய உடுமலை நாராயண கவி, கம்பதாசன், கண்ணதாசன், வாலி உள்ளிட்ட பல கவிஞர்களைப் பற்றியும் பல அரிய செய்திகளை சுவைபட விளக்குகிறது இந்த நூல். பாசப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், அறிவுரைப் பாடல்கள், சடங்குப் பாடல்கள், காதல் பாடல்கள், கேள்வி- பதில் பாடல்கள் என பாடல்களின் பல்வேறு வகைகளை நூலில் பார்க்கலாம். பாடலின் இசை அமைப்பும், பாடல்களின் ராகங்களும் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. எம்.எஸ்., பி.சுசீலா, ஜிக்கி, லீலா, ஏ.எம்.ராஜா, டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன் உள்ளிட்ட பல பாடகர்களைப் பற்றிய அரிய செய்திகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.
நூலில் இடம் பெற்றுள்ள சில அத்தியாயங்கள் தலைப்புகள்:
சின்னப் பெண்ணான போதிலே, மங்கியதோர் நிலவினிலே, காற்றினிலே வரும் கீதம், மன்னவன் வந்தானடி, கட்டோடு குழல் ஆட, ஆட, வசந்த முல்லை போலே வந்து, மாசிலா உண்மைக் காதலே, ரோஜா மலரே ராஜ குமாரி. இசை ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் படிக்கவும், மற்றவர்களுக்குப் பரிசளிக்கவும் உகந்த நூல் இது.
Release date
Ebook: 7 March 2025
Tags
English
India