Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Thirumana Thadai Neekkum Deiveega Thiruthalam

Language
Tamil
Format
Category

Religion & Spirituality

கொங்கு மண்டலத்தின் சத்தியமங்கலத்திற்கு அருகே உள்ள ஓர் அழகிய கிராமம் கெம்பநாயக்கன்பாளையம். இந்தப் பேரூராட்சியின் ஒரு பகுதி கொருமடுவு என வழங்குகிறது. இங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயிலுள் விநாயகர், சிவபெருமான், பார்வதி, பைரவர், ஒன்பான் கோள்கள், சண்டிகேசுவரர், திருமால், திருமகள், பிரமன், பிராம்மி, சரசுவதி, தட்சிணாமூர்த்தி ஆகிய கடவுள்களின் சன்னதிகளோடு கொங்கு குலதெய்வங்களில் சிறப்பு வாய்ந்த செல்லாண்டி அம்மனுக்கும், பிதுர் தேவர்களுக்கும் தனித்தனியாகச் சன்னதிகள் அமைந்துள்ளன.

இந்த ஆலயத்தைப் பற்றிய செய்திகளை விளக்குவதோடு இங்கு சிறப்பாக நடைபெறும் சுயம்வரா வேள்வியைப் பற்றியும் ஆசிரியர் உமையவன் அவர்கள் நன்கு விவரித்துள்ளார். இந்த நூலில் ஆலய வழிபாட்டின் அவசியமும், ஒன்பான் கோள்கள் பற்றிய செய்திகளும், தோத்திரப் பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

திருமணத்தடை நீக்கும் தெய்வீகத் திருத்தலம் என்னும் இந்தத் தலவரலாற்று நூலைத் திரு. உமையவன் அனைவரும் பயன்படுமாறு எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூலாசிரியரைப் பாராட்டி வாழ்த்துகிறோம். பொதுமக்கள் அனைவரும் தல வழிபாட்டில் ஈடுபட்டு இறையருளைப் பெற்று நன்கு வாழ இத்தகைய நூல்கள் பேருதவி புரியும்.

ஆசிரியர் உமையவன் அவர்களின் இத்தகைய பணி தொடர்ந்து சிறப்படைய வாழ்த்துகள்.

அன்புடன்

குமரகுருபர சுவாமிகள்

Release date

Ebook: 2 July 2020

Others also enjoyed ...