Step into an infinite world of stories
History
"மன்னா... இதென்ன விபரீத யோசனை? அரசாங்கம் சாராயக் கடைகள் நடத்துவதா? சரித்திரத்தில் இதுவரை கண்டிராத யோசனையாகவும் அல்லவா இருக்கிறது? படு கேவலமான யோசனையாகவும் இருக்கிறதே...! நீருக்குப் பதில் சாராயம் குடித்தால் மக்கள் கதி என்னாவது?"
"இங்கேதான் நீர் எமது ராஜதந்திரத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரே திட்டத்தில் பல கனிகளைக் கொய்பவன் இந்த மணிமாறன். மக்கள் சாராயத்தை நிறையக் குடிக்கட்டும். விளைவாக குறைவாகச் சாப்பிடுவார்கள். உணவுப் பஞ்சம் தீரும். இது ஒரு கனி."
"அடடே..."
"சாராய விற்பனையை அரசே நடத்துவதால் நமக்கும் கஜானா நிறையும். இது இரண்டாவது கனி."
"ஆஹா... பிரமாதம் அரசே..."
"குடிசாராயம் சாப்பிடும் மக்கள் சீக்கிரத்தில் உயிரை விடுவதால் நாட்டில் ஜனத்தொகையும் குறையும். இது மூன்றாவது கனி." பெருமையாகப் பார்க்கிறான் மணி. "எப்படியுள்ளது சாத்தனாரே எமது முக்கனித் திட்டம்?"
"ஆஹா... அபாரம் அரசே. தங்களைப் போல மதி நிறைந்த மன்னரைச் சரித்திரம் கண்டதில்லை!"
Release date
Ebook: 19 December 2022
English
India