Step into an infinite world of stories
Fiction
சிறப்புமிகு நூல்களின் வரிசையில் புதிய வரவாக மன்றத்தின் துணைத் தலைவரும் சிறந்த கவிஞருமான நூலாசிரியர் இரஜகை நிலவன் அவர்களின் கவிதைத் தொகுப்பான “உலகம்உன் வசம்” எனும் நூல் ஒன்று புதிதாக வெளியிடப்படுவதில் மிகுந்த மகிழ்வடைகின்றோம். நூலாசிரியர் பல்வேறு கவிதைத்தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைத்தொகுப்பு எனத் தொடர்ந்து பத்து நூல்களுக்கும் மேலாக வெளியிட்டுள்ளார் என்பது அறியத் தக்கது.
கவிச்சிகரம், கவிமாமணி, சிறுகதைச்செல்வர், தமிழ்முகில் என பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் தமது படைப்புகளுக்காப் பெற்றவர் என்பதனை மன்றம் பெருமையுடன் கூறிக்கொள்கிறது.
சமீபத்திய தவிர்க்கப்பட முடியாத ஊரடங்கு காலத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி பல்வேறு கவிதைகளையும் எழுதிக் குவித்துள்ள நூலாசிரியர் மராத்திய மாநிலத்தில் உள்ள எழுத்தாளர்களில் அதிகமான படைப்புகளை எழுதியவர் என்பதனை மன்றம் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறது.
தனது எழுத்துகள் மூலம், சிறந்த கற்பனைத்திறன் மூலம் மனித மாண்பைப் போற்றுகின்ற வகையில் அன்னைத் தமிழுக்கு அழகு சேர்க்க எண்ணி தொய்வின்றி உழைக்கும் நூலாசிரியரை வாழ்த்தி மகிழ்கின்றோம்.
இத்தகைய நூலை வெளியிட்டு உலகில் மனிதம் தழைக்கவும் வாசகர்கள் தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வண்ணம் நம்மால் முடியும் என்ற அருமருந்தை உள்ளங்களில் விதைக்கும் வண்ணம் “உலகம் உன் வசம்” என்று அறிவுறுத்தும் நூலாசிரியர் இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்துவார் என்ற நோக்கில் வெளியிட்டு மகிழ்கின்றோம்.
Release date
Ebook: 12 April 2025
Tags
English
India