Step into an infinite world of stories
Classics
ஆதி காவியமான வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான கதைகளையும், சம்பவங்களையும், சாபங்களையும், வரங்களையும் காண்கிறோம். வாழ்நாள் முழுவதும் படித்து அனுபவிக்க வேண்டிய இந்தக் காவியத்தில் 61 சாபங்களும் 82 வரங்களும் இடம் பெறுகின்றன.
சரிதம் ரகுநாதஸ்ய சதகோடி ப்ரவிஸ்தரம்| ஏகைக மக்ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாசனம்||
- ‘இந்தக் காவியத்தில் ஒரே ஒரு அக்ஷரத்தைச் சொன்னால் கூட மகா பாவமும் நாசமாகும்’ என்பது வால்மீகி ராமாயணத்தைப் படிப்பதன் முக்கிய பயன்களில் ஒன்றாகும். கதை ஓட்டத்திற்கும், கதையின் சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணத்திற்கும் இந்த சாபங்களும் வரங்களும் காரணமாக அமைகின்றன. ஆகவே இவற்றை அறிவது இன்றியமையாததாக ஆகிறது. முதல் பாகத்தில் பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டத்தில் விவரிக்கப்படும் 29 சாபங்கள் குறித்த விளக்கங்கள் தரப்பட்டன. இப்போது, கிஷ்கிந்தா காண்டத்தில் வரும் 4 சாபங்கள், சுந்தரகாண்டத்தில் வரும் ஒரு சாபம், யுத்த காண்டத்தில் வரும் மூன்று சாபங்கள் மற்றும் உத்தர காண்டத்தில் வரும் 24 சாபங்கள் ஆகியவை 30 முதல் 61 முடிய உள்ள அத்தியாயங்களாக இரண்டாம் பாகமாக மலர்கிறது.
Release date
Ebook: 12 April 2025
English
India